Breaking: அதிமுக செயற்குழு கூட்டம் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறும்.. ஓ.பி.எஸ்-இ.பி.எஸ். அறிவிப்பு
சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், சசிகலா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதில் அன்வர் ராஜா Vs சி.வி.சண்முகம் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூட தகவல் வெளியானது.

அதிமுக செயற்குழு கூட்டம்
இந்தச் சூழலில் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் டிசம்பர் 1ஆம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமையில் டிச. 1ஆம் தேதி காலை 10 மணிக்கு ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் தலைமை
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் வருகின்ற 01.12.2021 புதன் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K. பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும்.

அதிமுக அறிவிப்பு
கழக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

முக்கிய சந்திப்பு
தற்போது தான் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்த நிலையில், செயற்குழு கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் உள்கட்சி தேர்தலை நடத்துவது குறித்தும், அவைத்தலைவரைத் தேர்வு செய்வது குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது குறித்தும் முக்கிய ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளது.
-
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications