டாஸ்மாக் கடைகளுக்கு நிரந்தர பூட்டு! சரக்கால் முளைத்தால் சிக்கல்.. எக்குத் தப்பாய் சிக்கிய எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் அதிமுகவும் முழு வேகத்தில் இறங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என அனைத்து நிலைகளிலும் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், அதிமுக தேர்தல் அறிக்கையில் 'மதுவிலக்கு' தொடர்பான வாக்குறுதி இடம் பெறுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மூத்த நிர்வாகிகளுடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களது தேர்தல் உத்திகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த முறை நான்கு முனை போட்டி உருவாகும் சூழல் உள்ளது.

அதே நேரத்தில் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிக்கையை மிக கவனமாக வடிவமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். திமுக ஏற்கனவே கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை குழுவை அமைத்து பணிகளைத் தொடங்கியுள்ளது.

AIADMK TASMAC Tamil Nadu Assembly Election 2026

2026 சட்டமன்ற தேர்தல்

இந்த நிலையில், அதிமுகவும் தங்களது அறிக்கைக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கையை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள் அடங்கிய இந்த குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்துள்ளது. அந்த சந்திப்புகளில் குறிப்பாக பெண்கள் மத்தியில் இருந்து 'டாஸ்மாக்' கடைகளை மூட வேண்டும், மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிமுக தேர்தல் அறிக்கை

இதனால், அதிமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பு இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால், இதே விவகாரத்தில் கட்சியின் உள்ளக சர்வே முடிவுகள் தெளிவான முடிவை எடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுவிலக்கு வாக்குறுதி கொடுத்தால் தேர்தலில் சாதகமா அல்லது பாதகமா என்ற குழப்பம் அதிமுக தலைமையில் உருவாகியுள்ளது. இதனாலேயே, பூரண மதுவிலக்கா அல்லது படிப்படியான மதுவிலக்கா என்ற இரு வழிகளில் எதை தேர்வு செய்வது என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

டாஸ்மாக் மதுவிலக்கு

இந்த ஆலோசனைகளில் பல சீனியர் நிர்வாகிகள் மதுவிலக்கு வாக்குறுதிக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த 2016 சட்டசபை தேர்தலில் திமுக பூரண மதுவிலக்கு வாக்குறுதி அளித்தது, அக்கட்சிக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியது என்றும், அதனால் தான் 2021 தேர்தலில் அந்த வாக்குறுதியை திமுக கைவிட்டது என்றும் அவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். இதே தவறு மீண்டும் நடக்கக் கூடாது என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது.

எடப்பாடி பழனிசாமி குழப்பம்

அதே நேரத்தில், டாஸ்மாக் மூலமாக ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் அரசுக்கு கிடைக்கிறது என்பதும் ஆலோசனையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த வருவாய் இல்லாமல் போனால், மாற்று வருவாய் ஆதாரங்களை தெளிவாக அறிவிக்காமல் மதுவிலக்கு வாக்குறுதி அளிப்பது அரசியல் ரீதியாக ஆபத்தானது என்றும் சிலர் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, தொழில் துறை வளர்ச்சி, முதலீடுகள், வேலைவாய்ப்புகள் ஆகியவற்றின் மூலம் வருவாயை உயர்த்தும் 'குஜராத் மாடல்' போன்ற திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.

மதுவிலக்கு அரசியல்

இந்த திட்டங்களை பிரதமர் மோடி வாயிலாக அறிவித்தால் தான், தமிழக மக்களிடம் அது நம்பகத்தன்மை பெறும் என்றும், அதிமுக-பாஜக கூட்டணிக்கும் அது வலுசேர்க்கும் என்றும் மதுவிலக்குக்கு ஆதரவாக பேசும் சீனியர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற மாறுபட்ட கருத்துகளால், மதுவிலக்கு குறித்து எந்த முடிவையும் எடுக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி திணறி வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+