அண்ணாமலை அந்த வார்த்தையை வாபஸ் வாங்கலைன்னா மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.. கொதித்து எழுந்த அதிமுக!
சென்னை: எடப்பாடி பழனிசாமியை நம்பிக்கை துரோகி என கூறியதை வாபஸ் பெறாவிட்டால் அண்ணாமலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் தன்னால்தான் பாஜக வளர்ந்துள்ளது என்பதை போன்ற பிம்பத்தை உருவாக்கி உள்ளதாகவும், அரசியல் தலைவர்கள் குறித்து தொடர்ந்து பொய் தகவல்களை பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து அண்ணாமலை கூறிய கருத்துக்கும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு காட்டமாக பதில் அளித்திருந்தார் அண்ணாமலை. விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, பிரதமர் மோடியின் முதுகில் குத்தியவர் எடப்பாடி பழனிசாமி, நம்பிக்கை துரோகி என்ற பெயர் அவருக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பதிலடி கொடுத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அண்ணாமலை போன்றவர்களால் தான் தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பாஜக தோல்வி அடைந்துள்ளது. மத்தியில் மைனாரிட்டி அரசாக பாஜக ஆட்சி அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசியுள்ள ஆர்பி உதயகுமார், “பாஜக வளர்ந்ததாக வார்த்தை ஜாலம் காட்டுகிறார் அண்ணாமலை. வெற்று விளம்பரங்களை செய்து களத்தில் தன்னை முன்னிலைப்படுத்த அண்ணாமலை பேராசைப்படுகிறார். அண்ணாமலை போன்ற தகுதி அனுபவம் இல்லாத அரைவேக்காடு தலைவர்களால் தான் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அண்ணாமலை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு உள்நோக்கம் கொண்டு எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கிறார். அதிமுக அடித்தளத்தை அசைத்து பார்க்கும் வேலையில் அண்ணாமலை ஈடுபட்டார். தமிழ்நாட்டுக்காக பேரிடர் நிவாரண நிதியை கூட பெற்றுத்தர முடியாதவர் அண்ணாமலை. மெட்ரோ ரயில் 2-வது கட்ட திட்டத்துக்காக ஒன்றிய அரசிடம் இருந்து அண்ணாமலை நிதியை பெற்றுத் தந்தாரா?
தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை நாகரிகமற்ற அரசியல் பண்பாட்டை தமிழ்நாட்டில் விதைத்து வருகிறார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அண்ணாமலை தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். இது போன்ற குற்றச்சாட்டால் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் சேவையை யாரும் மறந்துவிட முடியாது.
அண்ணாமலையின் சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது. அதிமுக பற்றி அண்ணாமலை பேசுவது, ஆடு நனைவதற்கு ஓநாய் கவலைப்படுவது போல உள்ளது. பழனிசாமி நம்பிக்கை துரோகி என்ற வார்த்தையை அண்ணாமலை வாபஸ் பெறவேண்டும், இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும். அதிமுக தொண்டர்கள் கொதித்து எழுந்தால் அண்ணாமலை என்ன விளைவுகளை எதிர்கொள்வார் எனத் தெரியாது” என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார் ஆர்பி உதயகுமார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications