நிச்சயமாக ‘தலைவர்’ வருவார்..! ஓபிஎஸ்சை மேடையில் வைத்தபடி.. ஆவேசமாக பேசிய வளர்மதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே' என்ற பாடலைப் பாடியதோடு ஒரு தலைவன் இருக்கிறார் அவர் நிச்சயம் வருவார் என எடப்பாடி பழனிச்சாமியை குறிப்பிட்டு பேசினார்..

Recommended Video

    AIADMK பொதுக்குழு கூட்டம் | Court case -> பொதுக்குழு என்ன நடந்தது? |Oneindia Tamil

    நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் திட்டமிட்டபடி இன்று தொடங்கியது.

    காலை 10 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி சுமார் 11 மணி அளவிலேயே திருமண மண்டபத்திற்கு வந்தார்.

    அதிமுக பொதுக்குழு

    அதிமுக பொதுக்குழு

    இதையடுத்து தனியார் பாதுகாவலர்கள் பலத்த பாதுகாப்போடு அவர் மேடைக்கு வந்தார். அவரை அடுத்து கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவதாக மேடைக்கு வந்தார். அப்போது அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

    ஓ.பன்னீர்செல்வம் தீர்மானம்

    ஓ.பன்னீர்செல்வம் தீர்மானம்

    ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்த நிலையில், அண்ணன் பன்னீர்செல்வம் முன்மொழிந்த தீர்மானத்தை வழிமொழிகிறேன் எனப் பேசினார் எடப்பாடி பழனிச்சாமி. அதைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களையும் நிராகரிக்கிறேன் என மிக ஆவேசமாக பேசினார்.

    முன்னாள் அமைச்சர் வளர்மதி

    முன்னாள் அமைச்சர் வளர்மதி

    அதற்கு அடுத்ததாக பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, தனது பேச்சை தொடங்கும்போதே என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே.. அந்த தலைவர் எங்கே இருக்கிறார் அவர் விரைவில் வருவார் என மிக ஆவேசமாக பேசினார்.

    எடப்பாடி தான் தலைவர்

    எடப்பாடி தான் தலைவர்

    அதாவது அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்பதனையும் எடப்பாடி பழனிச்சாமி தான் தலைவராக வரவேண்டும் என குறிப்பிட்டு அவர் பேசியது வெளிப்படையாகவே தெரிந்தது. அப்போது மேடையில் இருந்த நிர்வாகிகளும், மண்டபத்தில் இருந்த பொதுக்குழு நிர்வாகிகளும் உற்சாகமாக கைதட்டி முழக்கமிட்டனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+