அதிமுக பொதுக்குழு வழக்கு! டெல்லிக்கு செல்லும் "கேம்".. இன்றே மேல்முறையீடு செய்கிறார் ஓபிஎஸ்! பின்னணி
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் மாறி மாறி தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இரட்டை நீதிபதிகள் அமர்வு கொடுத்த தீர்ப்பிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்கிறார்.
அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக முதலில் வந்த தீர்ப்பில் உயர் நீதிமன்ற தனி நீதிபதி பொதுக்குழுவை நடத்த அனுமதி கொடுத்தார். அதன்பின் இரட்டை நீதிபதிகள் அமர்வில் அதிகாலை 4 மணிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் பொதுக்குழுவில் அனுமதிக்கப்பட்ட 23 மசோதாக்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
முதல் தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக வந்தது. இரண்டாவது தீர்ப்பு ஓ பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக வந்தது. இதையடுத்து நடந்த ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவில், ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவித்தது.

முதல் தீர்ப்பு
இதற்கு எதிராக தனி நீதிபதியிடம் ஓ பன்னீர்செல்வம் முறையிட்டார். ஆனால் அவர் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். இதன்பின் கூடிய பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதோடு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன. ஓ பன்னீர்செல்வம் இந்த பொதுக்குழுவை ஏற்றுக்கொள்ளாத நிலையில் இதற்கு எதிராக வழக்கு தொடுத்தார். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று.. வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரிக்கப்பட்டது.

இரண்டாவது தீர்ப்பு
இதில் உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயசந்திரன் வழங்கிய தீர்ப்பில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. ஜூன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலை தொடர வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது ஜூலை 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும். அந்த பொதுக்குழுவில் எந்த பதவியும் உருவாக்கப்படவில்லை, நீக்கப்படவில்லை. அது தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது.

ஓ பன்னீர்செல்வம்
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் இரட்டை நீதிபதி அமர்வு முன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது . பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர். இதன் மூலம் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி
இப்படி அதிமுக பொதுக்குழு வழக்கில் மாறி மாறி தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இரட்டை நீதிபதிகள் அமர்வு கொடுத்த தீர்ப்பிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்கிறார்.ஓபிஎஸ் வழக்கறிஞர்கள் மனோஜ் பாண்டியன், அரவிந்த் பாண்டியன் ஆகியோர் ஓபிஎஸ் சார்பாக மனு தாக்கல் செய்கின்றனர். இதை முன்னிட்டு எடப்பாடி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் வழக்கு தொடுத்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று எடப்பாடி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications