பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் வழங்குங்க ஸ்டாலின்.. தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வைத்த வேண்டுகோள்!
சென்னை: தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு ரூ.5 ஆயிரம் பரிசாக வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் வைத்துள்ளார். அதிமுக ஆட்சியின் போது ரூ.2,500 வழங்கப்பட்டதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, திமுக கார்ப்பரேட் கம்பெனியாக மாறிவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் கடைகளில் பரிசுப்பொருட்கள் வழங்கப்படும். வேட்டி, சேவை, கரும்பு, பொங்கல் வைப்பதற்கான பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு அளிக்கப்படும். முன்னதாக அதிமுக ஆட்சியில் ரூ.2500 பரிசுத் தொகையாகவும் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பரிசுப்பொருட்கள் மட்டுமே அளிக்கப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
அதில் எடப்பாடி பழனிசாமி, திமுக என்பது கார்ப்பரேட் கம்பெனி. ஆனால் அதிமுக ஜனநாயக இயக்கம். கட்சிக்காக உழைக்கும் யாரும் பதவிக்கு வர முடியும். திமுக போல் அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது. எனக்கு பின்னாலும் எத்தனை ஆண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காக இயங்கும் என்று ஜெயலலிதா கூறினார். அதனை நிரூபிக்கும் வகையில் நாம் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும்.
திமுக எவ்வளவோ கொள்ளையடித்து வைத்துள்ளது. இந்த தைப் பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். அதிமுக ஆட்சியின் போது ரூ.2,500 வழங்கப்பட்டது. அப்போது ஸ்டாலின், ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இப்போது நான் கோரிக்கையாக வைக்கிறேன். அதேபோல் 2026ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நல்ல கூட்டணி அமையும்.
அதிமுக எப்போதும் சொந்த பலத்தை நம்பி இருக்கும் கட்சி.. திமுக பலம் இழந்துவிட்டது. அதன் காரணமாகவே கூட்டணியை நம்பி இருக்கிறார்கள். தேர்தல் நெருங்கும் போது கூட்டணி அமைப்போம். நிச்சயமாக அருமையான கூட்டணி அமையும். 210 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்கும். கூட்டணிக்கு அதிமுகவே தலைமை தாங்கும் என்று தெரிவித்தார்.
-
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்?












Click it and Unblock the Notifications