எஸ்பி வேலுமணி பாய்ந்தது வழக்கு.. இன்னும் 19 அமாவாசைகள் தான்..! பாய்ந்து வந்த எடப்பாடி பழனிசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது ஊழல் வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், திமுக ஆட்சியின் ஆயுட் காலம் 19 அமாவாசைகள் தான்.. நாட்கள் எண்ணப்படுகின்றன எனவும், சர்வாதிகார ஆட்சி நடத்தியதற்காக மக்களிடம் பதில் சொல்லும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்று எச்சரிக்கிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தலைமை நிலையச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான திரு. S.P. வேலுமணி, M.L.A., சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் மீது, தனியார் அமைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய ஆதாரமற்ற புகாரின் அடிப்படையில் விடியா திமுக அரசு, தனது லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

edappadi palaniswami sp velumani dmk


விடியா திமுக அரசின் அமைச்சர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு ஊழல் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், 2021 ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தமிழ் நாடு லஞ்ச ஒழிப்புத் துறை அடித்த அந்தர் பல்டியைப் பார்த்த மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றமே, தன்னிச்சையாக இவ்வழக்குகளை மீண்டும் விசாரித்து வருவதில் இருந்தே, பொம்மை முதலமைச்சரின் ஏவல் துறை எப்படி செயல்பட்டு வருகிறது என்பதைத் தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.

திரு. எஸ்.பி. வேலுமணி அவர்கள் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 2001-2006 மாண்புமிகு அம்மா அவர்கள் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 'மழைநீர் சேகரிப்பு இயக்கம்' 2011 முதல் மீண்டும் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டது. மழைநீர் சேகரிப்பின் காரணமாக சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததை சென்னை மாநகர மக்கள் நன்கு அறிவார்கள். அனைத்து மழைநீர் வடிகால் கால்வாய்களும் பருவ மழைக்கு முன்பே தூர் வாரப்பட்டதன் காரணமாகவும், சென்னை சாலைகளில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு அமைக்கப்பட்டதன் காரணமாகவும், கன மழையின்போது சென்னை சாலைகளில் மழைநீர் தேங்குவது பெரிய அளவு குறைந்தது.

2015-ஆம் ஆண்டு ஆந்திராவில் வீசிய புயலின் போது பெய்த மிக கனமழையினால், தமிழகம் வழியாக பாய்ந்தோடும் ஆந்திர மாநில ஆறுகளில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு மற்றும் சென்னையில் தொடர்ந்து பல நாட்களாக பெய்த கனமழை ஆகியவற்றின் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்பை நிரந்தரமாக சரிசெய்ய இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் அடங்கிய வல்லுநர் குழு அமைக்கப்பட்டு அவர்களது அறிக்கைகளின்படி 'அம்மாவின் அரசு' 4 ஆண்டுகளில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 196 கி.மீ. நீள ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நீர்நிலைகள் மறுசீரமைப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால், 2015-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் தேங்கியிருந்த 306 இடங்கள், 2020-ஆம் ஆண்டில் மூன்றாகக் குறைக்கப்பட்டது.

சென்னையில் மாநகரட்சி மற்றும் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 210 நீர்நிலைகளில், 140 நீர்நிலைகள் தூர் வாருதல் மற்றும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், திருக்கோயில்களுக்குச் சொந்தமான திருக்குளங்கள், பொது மற்றும் தனியார் கிணறுகளும் தூர் வாரப்பட்டு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை நாங்கள் ஏற்படுத்தினோம். இதற்காக, அப்போதைய சமூகநல ஆர்வலர்களும்,

ஊடகங்களும் எங்களைப் பாராட்டியதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. தொடர்ந்து கூவம், அடையாறு கரையோரங்களில் பாதுகாப்பற்ற நிலையில் வசித்து வந்த சுமார் 17,750 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, அவர்கள் பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் புதிய குடியிருப்புகளில் நிரந்தரமாக குடியமர்த்தப்பட்டு, இரண்டு ஆற்றின் கரைகளும் பலப்படுத்தப்பட்டன. கரைப் பகுதிகளில் கட்டுமானங்களுக்கு ஏற்கெனவே இருந்த கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டன.

அதேபோல், எங்கள் ஆட்சிக் காலத்தில் பழுதடைந்த பேருந்து தடச் சாலைகள் சுரண்டப்பட்டு, கேம்பர் சாலைகளாக பழைய உயரத்திற்கு மிகாமல் மாற்றம் செய்யப்பட்டு 7 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றும் உறுதியாக பயன்பாட்டில் உள்ளன. ரொபோடிக் எக்சவேட்டர், மினி ஆம்பிபியன் போன்ற நவீன வாகனங்கள் வாங்கப்பட்டு, ஆண்டு முழுவதும் தூர்வாரும் பணிகள் நடைபெற்றன. மழைக் காலங்களில் மக்களுக்கு சேவையாற்ற 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில், அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்ட (Command and Control Centre) கட்டுப்பாட்டு அறை 75 பணியாளர்களுடன் துவக்கப்பட்டது.

சென்னையில் மழைநீர் வடிகால் நிரந்தரத் தீர்வுக்காக அடையாறு பேசின், கோவலம் பேசின் மற்றும் கொசஸ்தலை ஆறு பேசின் ஆகிய மூன்று பெரிய திட்டங்களை ஐந்தாண்டுகளுக்குள் முடிக்கக் கூடிய வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டன. இதன்மூலம், சென்னையில் உள்ள சுமார் 2,400 கி.மீ. நீளமுள்ள வடிநீர் கால்வாய்களை இணைக்கும் திட்டம் ஜெய்கா, ஜெர்மன் நாட்டு நிதி நிறுவனம் மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்களின் மூலம் நிதி ஆதாரங்களைத் திரட்டி பணிகள் தொடங்கப்பட்டது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு பணிகள் முடிக்கப்பட வேண்டுமென்று திட்டமிடப்பட்டு, எங்களது ஆட்சிக் காலத்தில் சுமார் 1,240 கி.மீ. நீள வடிகால் பணிகள் முடிக்கப்பட்டன. இதுதவிர, கொரோனா பெருந்தொற்றின்போது அம்மா அரசும், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் ஆற்றிய பணிகளை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.

சென்னை மாநகரின் வளர்ச்சிக்காக இரவு பகல் பாராமல் அரும்பாடுபட்ட மாநகராட்சி பொறியாளர்களின் பெயர்களும் முதற்கட்ட தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. மாநிலம் முழுவதும் உண்மையான பொறுப்புணர்வுடன் இயற்கைச் சீற்றங்கள், நோய் தொற்றுக் காலங்கள் போன்ற நேரங்களில் தொய்வின்றி பணிபுரியும் அதிகாரிகள் மத்தியில் காழ்ப்புணர்ச்சியுடன் போடப்படும் இதுபோன்ற வழக்குகளால், அரசு அதிகாரிகள் மத்தியில் ஒரு தொய்வு ஏற்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

விடியா திமுக அரசு பொறுப்பேற்றவுடன், எங்கள் அரசு மேற்கொண்ட பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பிறகு, ஓராண்டு தாமதத்திற்குப் பிறகே பணிகள் துவக்கப்பட்டன. இதனால்தான், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 2021-ஆம் ஆண்டு பெய்த பருவ மழைக்கே சென்னை வெள்ளத்தில் மிதந்தது. விரைவில் பருவ மழையை சென்னை மாநகரம் எதிர்கொள்ள உள்ளது. கடந்த 40 மாத கால செயல் திறனற்ற விடியா திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் வடிகால் பணிகள், தூர் வாருதல் பணிகள் மற்றும் சாலைகளை சீரமைத்தல் பணிகளுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டதாகக் கூறும் தங்களது வேஷம் கலைந்துவிடுமோ என்றும், விடியா திமுக ஆட்சியின் மீது கூறப்படும் 4,000 கோடி ரூபாய் பற்றிய புகார்கள் மீண்டும் தமிழக மக்கள் மத்தியில் பேசப்படுமோ! தங்களின் ஊழல்கள் அம்பலப்பட்டு விடுமோ!என்ற பயம் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது.

"மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பத்திரப் புதிவு கட்டண உயர்வு உள்ளிட்ட அரசின் அனைத்துக் கட்டணங்களும் பலமடங்கு உயர்வு, உணவுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் கடுமையான விலை உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, கள்ளச் சாராயம், தமிழகத்தை கஞ்சா மற்றும் போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய பெருமை" என்று விடியா திமுக அரசின் மீது கோபத்தின் உச்சியில் இருக்கும் தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்ப, தனது கண் அசைவுக்கு தாளம் போடும் லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவி விட்டிருக்கிறார் விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலின். இதுபோன்ற தகிடுதத்தங்களால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை முடக்கிவிடலாம்; எதிர்க்கட்சி என்ற முறையில் இந்த நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அராஜக அரசின் அவலங்களை மக்களிடம் தோலுரித்துக் காட்டும் எங்களது செயல்களை தடுத்து நிறுத்திவிடலாம்; போதைப் பொருட்கள் கடத்தலின் கேந்திரமாகத் தமிழகம் விளங்கும் கேவலத்தை மக்களிடம் இருந்து மறைத்துவிடலாம் என்று திரு. ஸ்டாலின் மனப்பால் குடிக்கிறார்.

சகோதரர் திரு. எஸ்.பி. வேலுமணி அவர்கள் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், குறிப்பாக 2017 முதல் 2021 வரை, நான்கு ஆண்டுகளில் மத்திய அரசிடமிருந்து ஊரக வளர்ச்சித் துறையில் மட்டும் 123 விருதுகளும், நகராட்சி நிர்வாகத் துறை, குடிநீர் உள்ளிட்ட துறைகளில் மேலும் பல விருதுகளும் பெற்று சாதனை படைத்தவர்.

விடியா திமுக ஆட்சியின் ஆயுட் காலம் 19 அமாவாசைகள் தான்; நாட்கள் எண்ணப்படுகின்றன. சர்வாதிகார ஆட்சி நடத்தியதற்காக மக்களிடம் பதில் சொல்லும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்று எச்சரிக்கிறேன்.

கட்டுமானப் பொருட்கள் கடுமையான விலை உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, கள்ளச் சாராயம், தமிழகத்தை கஞ்சா மற்றும் போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய பெருமை" என்று விடியா திமுக அரசின் மீது கோபத்தின் உச்சியில் இருக்கும் தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்ப, தனது கண் அசைவுக்கு தாளம் போடும் லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவி விட்டிருக்கிறார் விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலின். இதுபோன்ற தகிடுதத்தங்களால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை முடக்கிவிடலாம்; எதிர்க்கட்சி என்ற முறையில் இந்த நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அராஜக அரசின் அவலங்களை மக்களிடம் தோலுரித்துக் காட்டும் எங்களது செயல்களை தடுத்து நிறுத்திவிடலாம்; போதைப் பொருட்கள் கடத்தலின் கேந்திரமாகத் தமிழகம் விளங்கும் கேவலத்தை மக்களிடம் இருந்து மறைத்துவிடலாம் என்று திரு. ஸ்டாலின் மனப்பால் குடிக்கிறார்.

சகோதரர் திரு. எஸ்.பி. வேலுமணி அவர்கள் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், குறிப்பாக 2017 முதல் 2021 வரை, நான்கு ஆண்டுகளில் மத்திய அரசிடமிருந்து ஊரக வளர்ச்சித் துறையில் மட்டும் 123 விருதுகளும், நகராட்சி நிர்வாகத் துறை, குடிநீர் உள்ளிட்ட துறைகளில் மேலும் பல விருதுகளும் பெற்று சாதனை படைத்தவர்.

விடியா திமுக ஆட்சியின் ஆயுட் காலம் 19 அமாவாசைகள் தான்; நாட்கள் எண்ணப்படுகின்றன. சர்வாதிகார ஆட்சி நடத்தியதற்காக மக்களிடம் பதில் சொல்லும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்று எச்சரிக்கிறேன்.” என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+