"எடப்பாடி எங்க தொகுதியில் தான் போட்டியிடணும்.!" முதல் நாளே குவிந்த 349 விருப்ப மனுக்கள்.. மேஜர் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதிமுக இதற்கான விருப்பமனு விநியோகத்தை நேற்று திங்கட்கிழமை தொடங்கியது. முதல் நாளான நேற்று மட்டும் 1,237 விருப்பமனுக்கள் பெறப்பட்டுள்ளன. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 349 விருப்பமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் அறிவிப்பே இன்னும் வரவில்லை என்ற போதிலும் தேர்தல் பணிகளை எல்லா அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் பிரச்சாரம் இன்னொரு பக்கம் என்றே அரசியல் கட்சிகள் பயணித்து வருகின்றன.

இதற்கிடையே அதிமுக தனது விருப்பமனு விநியோகத்தை நேற்றைய தினம் தொடங்கியது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருப்ப மனு வினியோகத்தைத் தொடங்கி வைத்தார். வரும் 23ம் தேதி வரை தினசரி காலை 10 மணி முதல் 5 மணி வரை விருப்ப மனு விநியோகிக்கப்பட உள்ளது. தமிழ்நாட, புதுச்சேரி, கேரளா சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே முதல் நாளான நேற்று மட்டும் 1,237 விருப்பமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 349 விருப்பமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், 888 பேர் தங்களுக்கு வாய்ப்பு கோரி விருப்பமனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, முதல் நாளான இன்று (15.12.2025 - திங்கட்கிழமை), சென்னையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விருப்பம் தெரிவித்து, மொத்தம் 1,237 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இதில், அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி K. பழனிசாமி 'தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து' 349 விருப்ப மனுக்களும், கழக நிர்வாகிகள் தங்களுக்குப் போட்டியிட வாய்ப்பு வேண்டி 888 விருப்ப மனுக்களும் பெறப்பட்டுள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
ஸ்ரீவைகுண்டம் கொடூரம்: “யார் அந்த மேலிடம்? முதல்வரை தாண்டிய பவர் சென்டரா?" விஜய்க்கு எடப்பாடி கேள்வி -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு?












Click it and Unblock the Notifications