இளக்காரமா போயிடுச்சா? அதிகாலையில் பறந்து போன செய்தி.. பாஜக மீது ஏக கடுப்பில் அதிமுகவாமே.. ஏன்?
எடப்பாடியை விமர்சனம் செய்த அந்த நிர்வாகி பெயர் தினேஷ் ரோடி.
சென்னை: பாஜக இன்று அதிகாலை எடுத்த முடிவு ஒன்று அதிமுகவில் இருக்கும் டாப் தலைகளை அப்செட் ஆக்கி உள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிர்மல் குமார் உள்ளிட்ட பாஜகவினர் சிலர் அதிமுகவில் சேர்ந்ததால் எடப்பாடி பழனிசாமி மீது பாஜகவினர் கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில்தான் பாஜகவினரை அதிமுக தூக்கிய கோபத்தில் பாஜக தொண்டர் ஒருவர் எடப்பாடி படத்தை எரித்தார். கூட்டணி கட்சிகளுக்கு இடையில் இது மேலும் பிரிவினையை ஏற்படுத்தியது.
தினேஷ் ரோடி என்பவர்தான் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை எரித்தது. இதையடுத்து சென்னை வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் இவரை நீக்குவதாக அறிவித்தார். 6 மாதங்களுக்கு கட்சியில் இருந்து தற்காலிகமாக இவரை நீக்குவதாக அறிவித்தார்.

சமாதானம்
இந்த நிலையில்தான் சமீபத்தில் நடத்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜகவை பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். அடக்கியே வாசிப்போம். கூட்டணி பற்றி பின்னர் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று பழனிசாமி கூறியதாக தகவல்கள் வெளியாகின. அதோடு ஜெயக்குமாரும் கூட்டம் முடிந்து வெளியே வந்து அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று கூறினார். அதிமுக - பாஜக இடையிலான மோதலை மட்டுப்படுத்தும் விதமாக, இரண்டு தரப்பிலும் அதிருப்தியில் இருப்பவர்களை சமாதானம் செய்யும் விதமாக ஜெயக்குமார் இப்படி பேசியதாக கூறப்பட்டது.

கோரிக்கை
அதே சமயம் அதிமுக நிர்வாகிகள் சிலர் நாங்கள் மோதலை விட்டுவிட்டு சமாதானம் ஆகிவிடுகிறோம். அதில் பிரச்சனை இல்லை. நாங்கள் சமாதானம் ஆக வேண்டும் என்றால் எடப்பாடி உருவப்படத்தை எரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் சிலர் கோரிக்கைகளை வைக்க தொடங்கினர். அதிமுக தரப்பில் இருந்தும் சிலர் பாஜக தரபபிள் இதை பற்றி பேசி இருக்கிறார்களாம். மேலும் சமூக வலைத்தளங்களிலும் இவர்கள் போஸ்டுகளை போட்டு வந்தனர். எடப்பாடியை விமர்சனம் செய்த அந்த நிர்வாகி பெயர் தினேஷ் ரோடி. கூட்டணியில் இருக்கும் தலைவரின் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்தியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

நீக்கம்
இதையடுத்து தினேஷை கட்சியில் இருந்து நீக்குவதாக பாஜக அறிவித்தது. இது தொடர்பாக பாஜக சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், மாவட்ட மையக்குழுவின் ஒப்புதலோடு பாரதிய கொள்கை. முரணாக ஜனதா செயல்பட்டதாலும், கட்சியின் கட்சியின் தூத்துக்குடி வடக்கு தலைவர் அனைத்து குறிக்கோள்களுக்கு நிலைப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்படுவதாலும் மாவட்ட பாரதிய ஜனதா திரு.தினேஷ் ரோடி கட்சியின் இளைஞர் அவர்கள் தற்போது அணி மாவட்ட வகித்தும் வரும் பொறுப்புகளில் இருந்து 6 மாத காலத்திற்கு விலக்கி வைக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்., என்று கூறப்பட்டது.

24 மணி நேரம்
ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவர் 24 மணி நேரத்தில் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். இவரை மீண்டும் கட்சியில் சேர்த்து வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் திரு வெங்கடேசன் சென்னகேசவன் அவர்கள் மாவட்ட இளைஞர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து திரு தினேஷ் ரோடி அவர்களை ஆறு மாத காலம் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்ற அறிவித்த அறிவிப்பானது உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பொறுப்பில் திரு தினேஷ் ரோடி தொடர்ந்து செயல்படுவார் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது., என்று கூறப்பட்டு உள்ளது.

கோபம்
இதுதான் அதிமுக தலைகளை அப்செட் ஆக்கி உள்ளதாம். நம்மிடம் பேசிய அதிமுக நிர்வாகி ஒருவர், கூட்டணியில் இருக்கும் தலைவரின் உருவப்படத்தை எரித்து உள்ளனர். அவரை நீக்கிவிட்டு உடனே சேர்த்தால் என்ன நியாயம். அதிமுக என்றால் அவ்வளவு இளக்காரமாக போய்விட்டதா? நீக்காமல் இருந்திருந்தால் கூட போதும். இப்போது நீக்கிவிட்டு சேர்த்துள்ளனர். இதன் அர்த்தம் என்ன? அப்படி என்றால் கூட்டணியில் இருக்கும் எடப்பாடியை விட.. பிரபலம் இல்லாத அந்த கடைசி தொண்டர்தான் அவர்களுக்கு முக்கியமா? இதுதான் அவர்களின் கூட்டணி தர்மமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர். மாஜி அமைச்சர் ஜெயக்குமாரும், குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடும் செயலில் பாஜக ஈடுபட்டு வருகிறது; அதிமுகவை சீண்டினால் எதிர்வினை அதிகமாக இருக்கும் என்று எடப்பாடி படத்தை எரித்தவர்களை நீக்கிவிட்டு மீண்டும் சேர்த்துக்கொண்ட பாஜகவின் செயல்பாடு குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications