சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் அனைவருக்கும் இடஒதுக்கீடு.. குளிரவைக்கும் அதிமுக தேர்தல் அறிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் அனைவருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என பாமக நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தையும் பாமக நடத்தியது.

AIADMK manifesto 2021: All caste will get reservation after Population census

இந்த நிலையில் வன்னியர்களின் தனி இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றும் அரசியல் கட்சிகளுடன்தான் கூட்டணி என பாமக அறிவித்திருந்தது. இதையடுத்து இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

அம்மா.. அம்மா.. அம்மா.. ஒரே சொல்தான்.. வாக்குகளை அள்ளிய எடப்பாடி.. தேர்தல் அறிக்கையில் அதிமுக மேஜிக்அம்மா.. அம்மா.. அம்மா.. ஒரே சொல்தான்.. வாக்குகளை அள்ளிய எடப்பாடி.. தேர்தல் அறிக்கையில் அதிமுக மேஜிக்

அதாவது அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிறபடுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு தொகுதிப்பு 20 சதவீதத்தை 3 ஆக பிரித்து வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும் சீர்மரபினருக்கு 7 சதவீதமும் மற்றவர்களுக்கு 2.5 சதவீதமும் வழங்குவதற்கா சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானது. அதில் ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் அனைவருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
All caste will get reservation after Population census, says AIADMK manifesto.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X