துரைமுருகன் பற்றி ஸ்டாலின் சொல்லிதான் ரஜினி பேசினாராம்.. கொளுத்திப்போட்ட அதிமுக! திகுதிகுனு எரியுதே!
சென்னை: திமுக அமைச்சர் எ.வ.வேலு புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய விஷயத்தால் பெரும் களேபரம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் அதிமுக தரப்பு ஒரு முக்கிய பாயிண்டை பிடித்து ரவுண்டு கட்டியது. தான் வெளிப்படையாக பேச முடியாமல் ரஜினியை வைத்து திமுகவில் உள்ள சீனியர்களை ஓரங்கட்ட முதலமைச்சர் ஸ்டாலின் நினைக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதற்கு முதல்வர் ஸ்டாலின் குலுங்கிக் குலுங்கி சிரித்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த்தை அட்டாக் செய்யும் வகையில் பேசி இருந்தார் அமைச்சர் துரைமுருகன். எனினும் பின்னர் இருவருமே இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். ஆனால், இந்த நெருப்பு இன்னும் அணையாமல் புகைகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் சொன்ன விஷயம்: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நேற்று கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "ரஜினிகாந்த் ஒரு நடிகர். தான் பங்கேற்கும் நிகழ்ச்சியில் சிலரை சந்தோஷப்படுத்த கருத்துக்களை கூறுவார். நடந்து முடிந்த அமைச்சர் எ.வ.வேலுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் தனது தந்தையின் ஆட்சியில் பல்வேறு பொறுப்புகள் வகித்து அதன் பிறகு தற்போது ஆட்சியைப் பிடித்துள்ளார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அடிப்படை உறுப்பினராக இருந்து படிப்படியாக உயர்ந்து இன்று பொதுச் செயலாளர் ஆகியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இது ரஜினிகாந்துக்கு தெரியாது. ஆகவே, முதல்வரை புகழவேண்டும் என்பதற்காக ரஜினிகாந்த் தான்தோன்றித்தனமாக பேசக் கூடாது.
ஸ்டாலின் ரஜினியை வைத்து பேச வைக்கிறார்: தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுகவில் உள்ள சீனியர்களை வெளியேற்ற முடியாத நிலையில், எ.வ.வேலு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்தை அழைத்துப் பேசவிட்டு சீனியர்களை அவமானப்படுத்தி இருப்பதாக எனக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
திமுகவில் மூத்த நிர்வாகி, இரண்டாம் நிலை தலைவரான அவரை விமர்சித்து, அவமானப்படுத்தும் வகையில் ரஜினிகாந்த் பேசுவதை மேடையில் இருந்த முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்பட அனைவரும் மகிழ்ந்து சிரிக்கிறார்கள் என்றால், துரைமுருகன் குறித்து தான் பேச முடியாததை, ரஜினியை வைத்து ஸ்டாலின் பேச வைத்துள்ளார் என்பதைத்தான் காட்டுகிறது.
ஸ்டாலினை வழிமொழிந்த உதயநிதி: திமுகவுக்கு நீண்ட காலம் உழைத்த சீனியர் துரைமுருகன் உட்பட மூத்த தலைவர்கள் வெளியேற வேண்டும் என ரஜினிகாந்த்தை வைத்து அவமானப்படுத்தி உள்ளார் ஸ்டாலின். அதனை வழிமொழிவது போல உதயநிதி, மூத்தவர்கள், இளைஞர்களுக்கு வழிவிட்டு கைபிடித்து அழைத்துச் செல்ல வேண்டும் எனப் பேசியுள்ளார். இதுபோன்று இரண்டாம் கட்ட தலைவர்களை அதிமுக ஒருபோதும் அவமானப்படுத்தியது கிடையாது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, அடுத்த கட்ட தலைவராக ஸ்டாலினை உருவாக்கினார். தற்போது முதல்வர் ஸ்டாலின் தன் மகன் உதயநிதியை அடுத்த தலைவராக்க முயல்கிறார். கருணாநிதிக்கு இவர்கள் மட்டும் தான் விழா எடுக்கிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆருக்கு அவரது தொண்டர்கள் விழா எடுக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார் கே.பி.முனுசாமி.
சர்ச்சை - சமரசம்: முன்னதாக, ரஜினியின் பேச்சு தொடர்பான கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், மூத்த நடிகர்கள் பல் விழுந்து, வயதாகி, தாடி வளர்த்துக்கொண்டும் நடிப்பதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்று தெரிவித்தார். இதனால் துரைமுருகன் - ரஜினிகாந்த் இடையே கருத்து மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.
ஆனால், முதல்வர் ஸ்டாலினே துரைமுருகனையும், ரஜினிகாந்த்தையும் தனித்தனியாக அழைத்துப் பேசியதாகவும் அதன்பிறகு துரைமுருகன், ரஜினிகாந்திடம் போனில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ரஜினிகாந்த், துரைமுருகன் இருவருமே, தங்களுக்கு இடையேயான நட்பு எப்போதும் போல தொடரும் என சுமூகமாக கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications