துரோகத்தின் மொத்த உருவமே ஓபிஎஸ் தான்! போகிற போக்கில் உதயநிதி மீது அட்டாக்.. கொந்தளித்த அதிமுக ’மாஜி’
சென்னை: உதயநிதி நாகரிகமாக பேச ஸ்டாலின் கற்றுக் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் மக்கள் உங்களுக்கு தக்க பாடம் கொடுப்பார்கள் எனவும், ஓ.பன்னீர்செல்வம் துரோகத்தின் மொத்த உருவம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர்," தேவர் ஜெயந்திக்கு எந்த முதலமைச்சரும் சென்றதில்லை. முதன் முதலாக சென்றவர் எடப்பாடியார் தான். அதிமுகவில் பிறப்பால் யாருக்கும் பதவி கொடுக்கவில்லை .இதே கருணாநிதி, வாரிசு அரசியலை பின்பற்ற திமுக சங்கர மடம் அல்ல என்று கூறினார்.

ஆனால் இன்று திமுக நிலைமை எப்படி உள்ளது? உதயநிதி நாகரிகமாக பேச ஸ்டாலின் கற்றுக் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் மக்கள் உங்களுக்கு தக்க பாடம் கொடுப்பார்கள். வருவாய் துறை சார்பில் கடந்த 10 ஆண்டுகள் நாங்கள் 25 லட்சம் பட்டாக்களை நாங்கள் வழங்கி உள்ளோம்.
இதுபோன்று நாங்கள் விளம்பரப்படுத்தியது இல்லை. தற்போது அமைச்சர் மூர்த்தி உதயநிதியை அழைத்து வந்து பட்டா என்ற பெயரில் ஏமாற்றி வருகிறார். இதன் உண்மை தெரிந்த நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மக்களை திரட்டி போராட்டம் செய்து வருகிறார். இதன் மூலம் பட்டா பொய் என்று மக்களுக்கு தெரிந்து விட்டது. இதற்குரிய விளக்கத்தை அமைச்சர் மூர்த்தி சொல்ல வேண்டும். தற்போது மதுரையில் பட்டா தரப் போவதில்லை ஆனால் கடலில் தான் பட்டா போட்டு கொடுப்பார்கள்.
2017ஆம் ஆண்டு அம்மாவின் புனித அரசு எடப்பாடியார் தலைமையில் நடைபெற்றது. அப்போது நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தபோது அம்மா அரசுக்கு எதிராக வாக்களித்தவர் தான் பன்னீர்செல்வம். அப்போது அவருடன் சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், சரவணன் இன்றைக்கு எடப்பாடியார் பாதை என்று சரி என்று இங்கு வந்துள்ளார்கள். அன்றைக்கு ஆட்சி கவிழ்ந்து இருந்தால் 11 மருத்துவக் கல்லூரிகள், 6 புதிய மாவட்டங்கள், 2000 அம்மா மினி கிளினிக், கொரோனா காலத்தில் நலத்திட்டங்கள் இப்படி மக்களுக்கு செய்திருக்க முடியுமா?
துரோகத்தின் மொத்த உருவம் தான் பன்னீர்செல்வம். அதையெல்லாம் மன்னித்து தான் துணை முதலமைச்சர், ஒருங்கிணைப்பாளர் பதவியை வழங்கினோம். ஜனாதிபதி பதவி மட்டும் தான் வழங்கவில்லை அது தேசிய கட்சிகள் தான் வழங்க முடியும். தொடர்ந்து கட்சி உடைப்பு வேளையில் பன்னீர் செல்வம் ஈடுபட்டார்.இது 2021 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியாரை முன்மொழிந்தவர் பன்னீர்செல்வம்.ஆனால் தேர்தல் பிரச்சாரத்திற்கு எந்த தொகுதிக்கும் செல்லவில்லை.
மதுரையில் 10 தொகுதியில் ஐந்து தொகுதி நாங்கள் வெற்றி பெற்றோம். ஆனால், தேனி மாவட்டத்தில் நான்கு தொகுதியில் உள்ளது.இதில் போடி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்று மற்ற மூன்று தொகுதிகளிலும் அதிமுகவுக்கு தோல்வி தந்தவர்தான் பன்னீர்செல்வம். சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தால் கட்சியை கபளீகரம் செய்து ,திமுகவிடம் அடமானம் வைக்க திட்டமிட்டார் பன்னீர்செல்வம். ஆனால் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆன்மா எங்களை காப்பாற்றி 75 சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களுக்கு தந்தது.
43 தொகுதிகளில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தால் இன்றைக்கு எடப்பாடியார் தமிழகத்தின் முதலமைச்சராக வந்திருப்பார்.அதிமுக ஆட்சி மலர ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்குகள் தான் அதைக் கூட பன்னீர்செல்வம் வாங்கி தர முடியவில்லை. அதிமுக கம்பீரம், உழைப்பு இழந்து போனது என்றால் அதற்கு காரணம் பன்னீர்செல்வம் தான்.
53 ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியில் கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களை திரும்பி சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று எடப்பாடியார் தெளிவாக கூறிவிட்டார். இதை ஊடகத்தை கூறினார். ஆனால் இதற்கு பன்னீர்செல்வம் எடப்பாடியாரை பற்றி அறிக்கை வெளியிட்டார். இதற்கு பன்னீர்செல்வத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எடப்பாடியாரை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தர்மயுத்தம் தொடங்கினார் அதனைத் தொடர்ந்து சசிகலாவை நீக்க வேண்டும், தினகரனை நீக்க வேண்டும், தலைமை கழகத்தில் உள்ள சசிகலா படத்தை அகற்ற வேண்டும் என்று கண்டிஷன் போட்டு தான் எங்களுடன் சேர்ந்த பன்னீர்செல்வம் சேர்ந்தார். ஆனால், டிடிவி தினகரனிடம் ரகசிய சந்திப்பை நடத்தினார். நன்றி என்ற தகுதியை இழந்தவர் தான் பன்னீர்செல்வம் என கூறினார்.












Click it and Unblock the Notifications