Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பச்சைத் துரோகம்..நிர்மல் குமாரால் கண் சிவந்த எடப்பாடி! இனி ‘இந்த’ தப்ப பண்ண கூடாது!ஸ்ட்ரிக்ட் ஆர்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு தாவிய சிடிஆர் நிர்மல் குமாருக்கு எடுத்த எடுப்பிலேயே துணை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி சற்று கோபமாகவே பேசி இருக்கிறார். குறிப்பாக கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு புதிய பதவிகள் வழங்கும்போது யோசித்து தான் பொறுப்பு கொடுக்க வேண்டும் என கூறினாராம்.

பாஜக ஐடி விங் தலைவராக இருந்த போதே, கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாஜகவில் இருந்து விலகிய சிடிஆர் நிர்மல்குமார், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்

edappadi palaniswami ctr nirmal kumar tvk

இந்த நிலையில் திடீரென விஜயை சந்தித்து தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்திருக்கிறார். அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளில் 5 முறை கட்சி தாவி இருக்கிறார் சிடிஆர் நிர்மல் குமார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த அவர் 2018 ஆம் ஆண்டு டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவர் 2023 மார்ச் மாதம் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து அதிமுகவில் இருந்து விலகி இருக்கும் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கட்சியில் சேர்ந்த சில நிமிடங்களிலேயே சிடிஆர் நிர்மல் குமாருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. விசிக முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு, தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரிவு செயலாளர் பதவியும், பிரபல யூட்யூபரும் பேச்சாளருமான ராஜ்மோகன் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.

அதிமுகவில் இணைந்த உடனேயே நிர்மல் குமாருக்கு ஐடி விங் இணை செயலாளர் பொறுப்பும், விசிகவில் இணைந்த உடனேயே ஆதவ் அர்ஜுனாவுக்கு துணை பொது செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென கட்சி மாறி இருக்கும் அவர்களுக்கும் மாநில பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் சிடிஆர் நிர்மல் குமார் கட்சித் தாவலினால் அதிருப்தியில் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக அவர் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

குறிப்பாக சென்னையில் நான்காம் தேதி கள ஆய்வு கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், அது தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை மாவட்டங்களில் கள ஆய்வுக் கூட்டத்தில் எந்தவித சண்டை சச்சரவுக்கும் இடம் தரக்கூடாது எனவும், மற்ற மாவட்டங்களில் நடந்தது போல சென்னையில் நடக்க கூடாது என எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். மேலும் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும், கட்சிக்காக உழைக்கக்கூடிய கட்சி அறிவிக்கும் போராட்டங்களில் பங்கேற்க கூடிய தகுதியான நபர்களுக்கு பொறுப்புகள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். மேலும் அண்ணா தொழிற்சங்க பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாகவும் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

குறிப்பாக பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு வந்த சிடிஆர் நிர்மல் குமாரை கட்சியில் சேர்த்ததே தவறு எனவும் அவருக்கு மாநில பொறுப்பு வழங்கியது மிகப்பெரிய தவறு என குறிப்பிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இனிமேல் வெளியில் இருந்து கட்சிக்கு வருபவர்களுக்கு பொறுப்பு வழங்கும்போது மிக கவனமாக பார்த்து யோசித்து தான் பொறுப்பு கொடுக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+