நம்மில் ஒருவர்... நமக்கான தலைவர் அதிமுகவின் தேர்தல் பஞ்ச் டயலாக் #EPSforTN
நம்மில் ஒருவர் நமக்கான தலைவர் என்ற பஞ்ச் வசனத்துடன் அதிமுக ஐடி விங் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டது.
சென்னை: ரத்தத்தின் ரத்தங்களே என்று சொன்னார் எம்ஜிஆர். அன்பு சகோதரியின் ஆட்சி மலர வாக்களியுங்கள் என்று கேட்டார் ஜெயலலிதா. இப்போது முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை நம்மில் ஒருவர் நமக்கான தலைவர் என்ற வசனத்துடன் களமிறக்கியுள்ளனர்.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு நேற்று விடை கிடைத்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை சந்திக்கிறது அதிமுக. தன்னை முதல்வராக தேர்வு செய்த அதிமுக தொண்டர்களுக்கு நன்றி கூறி கடிதம் எழுதியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. சாமானியன், உழவன் மட்டுமே அதிமுகவில் முதல்வர் ஆக முடியும் என்று கூறியுள்ளார்.
2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியை தொடர உறுதி ஏற்போம் என்று அழைப்பு விடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் இருக்கும் நிலையில் வேலையை படு பரபரப்பாக ஆரம்பித்து விட்டது அதிமுகவின் ஐடி அணி. "நம்மில் ஒருவர் நமக்கான தலைவர்" என்ற வசனத்தை பயன்படுத்தி போஸ்டர் போட்டு வாக்கு சேகரிக்க ஆரம்பித்து விட்டது.
பிற கட்சிகள் ஒற்றை தலைமை என்று சொல்லி வந்த நிலையில் இதுநாள் வரை ஓபிஎஸ் இபிஎஸ் இருவரை போட்டு பிரச்சாரம் செய்தனர். வரும் சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை மட்டும் முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க உள்ளது.
ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களால் நான் மக்களுக்காக நான் என்று சொல்லி வாக்கு சேகரிப்பார். அமைதி வளம் வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தை சொல்லி பேசுவார். அதிமுக வரும் தேர்தலில் தாரக மந்திரமாக என்ன சொல்லப்போகிறது என்று பார்க்கலாம்.
-
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications