திமுக அரசு அடித்த அடி! மாஜி அமைச்சர்கள் மீதான சிபிஐ நடவடிக்கைக்கு ஓகே சொன்ன ஆளுநர் ரவி- அதிமுக ஷாக்!
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு நடத்தி வரும் சட்டப் போராட்டம் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு அதிர்ச்சியையும் நெருக்கடியையும் கொடுத்திருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா ஊழல் வழக்குகளில் சிபிஐ நடவடிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தருவதால் அதிமுக தரப்பு ரொம்பவே ஆடிப் போய் இருக்கிறது.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்துள்ளார்; தமிழ்நாடு அரசின் கோப்புகளுக்கும் ஒப்புதல் தரவில்லை ஆளுநர் ஆர்.என்.ரவி என்பது தமிழ்நாடு அரசின் வழக்கு. இந்த வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சரமாரியான குட்டுகளையும் கண்டனங்களையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் குவித்து கொண்டிருக்கிறது.

நெருக்கடியில் ஆளுநர் மாளிகை: தமிழ்நாடு சட்டசபை நிறைவேற்றும் மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்கவே முடியாது; அதுவும் 2-வது முறை அனுப்பும் மசோதாவை நிதி மசோதா போல கருதி ஒப்புதல் தந்தாக வேண்டும் என உச்சநீதிமன்றம் கறாராக சொல்லி இருப்பது ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்புக்கு கடும் நெருக்கடியையும் அரசியல் சாசன நெருக்கடியையும் உருவாக்கிவிட்டது.
தளர்ந்தது பிடிவாதம் : இதனால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இதுவரை கிளியர் செய்யாத அரசின் கோப்புகள் பலவற்றுக்கும் ஒப்புதல் தந்துவிட்டதாக ஆளுநர் மாளிகை தரப்பு தெரிவித்தது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமண மீதான குட்கா ஊழல் வழக்குகளில் சிபிஐ நடவடிக்கைக்குமான கோப்புகளுக்கும் ஒப்புதல் கொடுத்துவிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்பதுதான் ஹைலைட். இதில்தான் அதிமுக தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
அதிமுகவின் மென்மை போக்கு: ஆளுநர் விவகாரத்தில் திமுக அரசு கடும் போக்கு காட்டினாலும் அதிமுக தரப்பு இத்தகைய கோப்பு விவகாரங்களுக்காகவே ஒருவித மென்மைப் போக்கை கடைபிடிக்கிறது என்பது பொதுவான விமர்சனமாக இருந்தது. தமிழ்நாடு சட்டசபை சிறப்பு கூட்டத்தில் அதிமுக ஆட்சிக் காலத்து மீன்வளப் பல்கலை கழக மசோதா- அதாவது ஜெயலலிதா பெயர் சூட்டக் கோரும் மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களை திமுக அரசு 2-வது முறையாக நிறைவேற்றியது. ஆனாலும் ஏதோ சாக்கு போக்கு சொல்லி 'ஆளுநர்' தரப்பு கோபம் கொள்ளாத வகையில் அதிமுக வெளிநடப்பு செய்து 'மென்மை'தன்மையை வெளிப்படுத்தியிருந்தது.
அதிமுக அதிர்ச்சி: என்னதான் அதிமுக தாஜா போக்கை கடைபிடித்தாலும் திமுக அரசு, உச்சநீதிமன்றத்தில் கூண்டில் ஏற்றிவிட்ட காரணத்தால் இனியும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் ஆளுநர் தரப்பு, அதிமுக மாஜி அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கு நடவடிக்கைகள் கோப்புகளுக்கும் ஒப்புதல் தந்தாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டது. எது நடக்கக் கூடாது என அதிமுக நினைத்ததோ அது நடந்துவிட்டதுதான் அதிமுக அதிர்ச்சியில் உறைந்து கிடக்க காரணம். இனி விஜயபாஸ்கர், ரமணா வழக்குகளில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தினால் நிலைமை சிக்கலாகிவிடும் என்பதால் அதிமுக தரப்பு ரொம்பவே ஆடிப் போகிறது எனவும் கூறப்படுகிறது.
-
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
Operation 6: விராலிமலை திமுக வேட்பாளரின் அண்ணன் அதிமுகவில் ஐக்கியம்! தட்டி தூக்கிய மாஜி அமைச்சர்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன்












Click it and Unblock the Notifications