“அன்பில் மகேஷின் சொந்த மாவட்டம்.. பள்ளி கட்டிடம் கட்டுவதிலும் கொள்ளை! வெட்கக்கேடு” அதிமுக பாய்ச்சல்
சென்னை: "கொள்ளை அடிப்பதையே கொள்கையாக கொண்ட திமுக அரசு, மாணவர்களின் அடிப்படை தேவையான பள்ளி கட்டுமானத்தில் கூட தங்கள் கொள்ளைக்காக Compromise செய்ய துணிவது வெட்கக்கேட்டின் உச்சம்!" என அதிமுக காட்டமாக விமர்சித்துள்ளது. திருச்சி அருகே அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த விவகாரத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 34 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள் உள்ள புதிய கட்டிடம் கட்டப்பட்டு ஒன்பது மாதங்களே ஆகிறது. இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் இன்று காலையில் இந்தப் பள்ளியின் வகுப்பறை கட்டிடத்தை திறப்பதற்காக வந்து பார்த்தபோது மேற்கூரை இடிந்து விழுந்து மாணவிகள் உட்காரும் நாற்காலியில் சிமெண்ட் கட்டிகள் கொட்டிக் கிடந்தன.

கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து தலைமை ஆசிரியர் வகுப்பறையை பூட்டிச் சென்ற நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து இன்று காலை பள்ளியை திறக்கும் போது தான், மேற்கூரை இடிந்து விழுந்தது தெரியவந்தது. பள்ளி வகுப்பறையில் குழந்தைகள் இருக்கும் பொழுது இச்சம்பவம் நடந்திருந்தால் குழந்தைகள் காயமடைந்து இருப்பார்கள். நல்வாய்ப்பாக விடுமுறை தினத்தில் இந்த அசம்பாவிதம் நடந்ததால் குழந்தைகள் காயமின்றி உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் நடந்த பள்ளியில், குழந்தைகளின் பெற்றோர்கள் சூழ்ந்து, அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாகஅதிமுக ஐடி விங் தமது சமூக வலைதளப் பக்கத்தில், "6 மாதம் முன் கட்டப்பட்ட அரசுப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த கொடுமை. எங்கு தெரியுமா? பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷின் சொந்த மாவட்டமான திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில்!
வரைமுறையில்லாமல் கொள்ளை அடிப்பதையே கொள்கையாக கொண்ட திமுக அரசு, மாணவர்களின் அடிப்படை தேவையான பள்ளி கட்டுமானத்தில் கூட தங்கள் கொள்ளைக்காக Compromise செய்ய துணிவது வெட்கக்கேட்டின் உச்சம்!" என விமர்சித்துள்ளது.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது சிறு குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிக் கட்டடங்கள் கூட, இந்தக் கேடுகெட்ட திமுக ஆட்சியின் ஊழலில் இருந்து தப்பவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இது வரை மேற்கூரை இடிந்து விழுந்த பள்ளிக் கட்டடங்களுக்குக் கணக்கே இல்லை. திமுக நிர்வாகிகள் பணம் சம்பாதிக்க, நமது குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படுகிறது. அதுவும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலை. இந்தப் பள்ளிக் கட்டடங்கள் கட்டிய ஒப்பந்ததாரர் யார்? என்ன அடிப்படையில் அவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது?
இடிந்து விழும் பள்ளிக் கட்டடங்கள் கட்டிய ஒப்பந்ததாரர்கள் மீது, இதுவரை திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஏற்கனவே, தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே இருக்கையில், தொடர்ந்து அரசுப் பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழுவதன் பின்னணி என்ன? திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் வேலையைச் செய்யவா தமிழக பள்ளிக் கல்வித் துறை? அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, இவை அனைத்துக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
26 வயது கொத்தனாருக்கு திருச்சியில் விழுந்த மரண அடி! காமுகர்களுக்கு நீதிபதி ஜெயந்தி தந்த சரியான பாடம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications