தமிமுன் அன்சாரிக்கு வலைவிரிக்கும் அதிமுக! சிறுபான்மையினர் ஓட்டுக்களை மீட்க தீவிரம் காட்டும் எடப்பாடி
சென்னை: பாஜகவை கூட்டணியிலிருந்து கழற்றிவிட்ட எடப்பாடி பழனிசாமி, இழந்த சிறுபான்மையினர் ஓட்டுக்களை மீண்டும் அதிமுகவுக்கு மீட்க தீவிரமாக காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டார்.
அந்த வகையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியை மீண்டும் அதிமுக பக்கம் இழுப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் தீவிரமாக களமாடி வரும் தமிமுன் அன்சாரி இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேச 2 முறை நேரம் கேட்டிருக்கிறார்.

ஆனால் 2 முறையும் தமிமுன் அன்சாரிக்கு முதலமைச்சர் தரப்பில் நேரம் ஒதுக்கப்படவில்லை. யார் யாரையோ தினமும் கோட்டையில் சந்திக்கும் முதல்வர், நமக்கு 2 முறை நேரம் கேட்டும் கொடுக்கவில்லையே என்ற அதிருப்தியில் இருந்து வருகிறார் தமிமுன் அன்சாரி. இதனால் இதனை சாதகமாக பயன்படுத்தி முதல் வேலையாக அன்சாரியை அதிமுக கூட்டணிக்குள் இழுத்து வரும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி இறங்கிவிட்டார்.
அதிமுக கூட்டணிக்கு தமிமுன் அன்சாரி ஒன்றும் புதியவர் அல்ல. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவே தமிமுன் அன்சாரி கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கி அதிமுக கூட்டணியில் இணைத்துக் கொண்டார். அதன் பிறகும் ஒட்டியும் ஒட்டாமலும் அதிமுக கூட்டணியில் தொடர்ந்த தமிமுன் அன்சாரி கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது வெளியேறி நிபந்தனையற்ற ஆதரவை திமுகவுக்கு வழங்கினார்.
ஆனாலும் அவருக்கு சட்டசபை தேர்தலின் போது திமுக தரப்பில் சீட் கொடுக்கப்படவில்லை. இப்போதும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக பேச முதல்வர் நேரம் கொடுக்கவில்லை. அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டாலும் வரும் டிசம்பர் மாதம் தான் மனிதநேய ஜனநாயக கட்சியின் கூட்டணி நிலைப்பாடு என்ன என்பது தெரியவரும் எனக் கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications