விஜய்யை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால்.. அதிமுக உடன் கூட்டணி வைக்க கோரிக்கை வைப்பேன்.. தாடி பாலாஜி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், அதிமுக உடன் கூட்டணி வைக்க கோரிக்கை வைப்பேன் என்று நடிகர் தாடி பாலாஜி தெரிவித்துள்ளார். தவெகவில் 2ஆம் கட்டத் தலைவர்கள் விசுவாசிகளாக நியமனம் செய்திருந்தால், கரூர் கோர சம்பவம் நடந்திருக்காது என்றும் தாடி பாலாஜி கூறியுள்ளார்.

செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்திற்கு பின் தவெக தலைவர் விஜய் உடனடியாக திருச்சி விமான நிலையம் வந்து, அங்கிருந்து தனி விமானம் மூலமாக சென்னை திரும்பினார். அதன்பின் ஒரேயொரு ட்வீட்டை பதிவிட்ட விஜய், 3 நாட்களுக்கு பின் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

Edappadi Palaniswami vijay aiadmk tvk

அதன்பின் விஜய் இதுவரை வீட்டில் இருந்து வெளியில் வரவில்லை. அதுமட்டுமல்லாமல் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ் மோகன் உள்ளிட்ட பலரும் தலைமறைவாக இருக்கின்றனர். புஸ்ஸி ஆனந்த் கடலில் இருப்பதாகவும், இன்னொரு புறம் பெங்களூரில் பதுங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

காவல்துறை கைது பயந்து தவெகவினர் தலைமறைவாகி இருக்கின்றனர். கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை கூட விஜய் நேரில் சென்று சந்திக்கவில்லை. இதனால் தவெகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனிடையே தவெகவில் இருந்த நடிகர் தாடி பாலாஜி, கரூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.

இதன்பின் நடிகர் தாடி பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், கரூர் சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் விஜய்க்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்துள்ளது. அவர் மிகப்பெரிய மன உளைச்சலில் இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக விஜய் பேசினால், அது பெரியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தும். விரைவில் மறைக்கப்பட்ட உண்மைகளை விஜய் வெளிப்படுத்துவார்.

தவெகவில் 2ஆம் கட்டத் தலைவர்களை விசுவாசிகளாக நியமித்திருந்தால், கரூர் கோர சம்பவம் நடந்திருக்காது. விஜய்க்கு விசுவாசமாக இருப்பவர்களே பதவிக்கு வர வேண்டும். பதவியை பெற்றுக் கொண்டு செயல்படாமல் இருக்க கூடாது. விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், அதிமுகவுடன் கூட்டணி வைக்க கோரிக்கை வைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே தவெக தொண்டர்கள் பலரும் அதிமுக - தவெக கூட்டணி இணைய வேண்டும் என்று சோசியல் மீடியாவில் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதற்கேற்ப எடப்பாடி பழனிசாமியும் தவெக உடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்து வருகிறார். இதனால் விஜய்யின் முடிவு என்னவாக இருக்கும் என்பதே அக்கட்சியினர் கேள்வியாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+