கருகிப் போன சவுந்தர்யா.. சரிந்த ராஜசேகர ரெட்டி! பிரபலங்களை காவு வாங்கிய விமான விபத்துகள்! ரிவைண்ட்!
சென்னை: அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் அதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மிக கோரமான விபத்தில் விஸ்வாஸ் குமார் மட்டுமே உயிர் பிழைத்து இருக்கிறார். இந்த நிலையில் இதுவரை நடந்த விமானம் மற்றும் ஹெலிகாப்டர் விபத்துகளில் உயிரிழந்த பிரபலங்கள் குறித்து பார்க்கலாம்..
கடந்த 12ம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்துக்கு சொந்தமான போயிங் 787 விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த விமானிகள் பணிப்பெண்கள், பயணிகள் உள்ளிட்ட 241 பேர் உயிரிழந்தனர்.
விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் பிழைத்தார். உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் இதற்கு முன்பு நடந்த விமான விபத்துக்கள் குறித்து அறிந்து கொள்ளவும் இணையத்தில் ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த வகையில் ஆந்திரா முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டி, நடிகை சௌந்தர்யா, ராணுவ தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட பலர் உயிரிழந்திருக்கிறார்கள். அந்த துயர சம்பவங்கள் குறித்து சற்று சுருக்கமாக பார்க்கலாம்..

நடிகை சௌந்தர்யா
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர் சௌந்தர்யா. தமிழில் கமலஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சௌமியா என்ற இயற்பெயர் கொண்ட இவர், கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி கர்நாடகாவில் பெங்களூருவில் இருந்து சென்றபோது நடந்து ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அதில் சௌந்தர்யாவும் அவரது சகோதரரும் பலியாகினர். அப்போது சௌந்தர்யா பாஜகவுக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி
ஆந்திர மாநிலம் ஆந்திரா, தெலுங்கானா என பிரிக்கப்படுவதற்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி. ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை. கடந்த 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹெலிகாப்டரில் சென்றபோது மோசமான வானிலை காரணமாக வனப்பகுதியில் நடந்த விபத்தில் சிக்கி பலியானார். அதனை தொடர்ந்து காங்கிரஸிலிருந்து விலகிய ஜெகன்மோகன் ரெட்டி தனது தந்தை பெயரில் ஒய்எஸ்ஆர் காங்கிரசை ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

சஞ்சய் காந்தி
இந்தியா சந்தித்த மிகப்பெரிய விமான விபத்து பலியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது சஞ்சய் காந்தியின் மரணம் தான். காங்கிரஸ் தலைவராகவும் பிரதமராகவும் இருந்த இந்திரா காந்தியின் மூத்த மகன் தான் இந்த சஞ்சய் காந்தி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சகோதரர். 1980 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி ஹெலிகாப்டரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து வெடித்து சிதறியது. அப்போது அதனை இயக்கிய சஞ்சய் காந்தி 33 வயதில் பலியானார்.

ஹோமி பாபா
இந்தியாவின் அணுசக்தியின் தந்தை என அழைக்கப்படுபவர் அணு விஞ்ஞான ஹோமி ஜாங்கிர் பாபா. 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி சர்வதேச மாநாடு ஒன்றில் பங்கேற்க ஐரோப்பிய நாடான பிரான்சுக்கு சென்றிருந்தார். டாங்க் பகுதியில் இவர் சென்ற விமான வெடித்து சிதறி உயிரிழந்தார். அந்த சம்பவம் இந்தியா மட்டுமல்லது உலகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பிபின் ராவத்
இந்திய ராணுவத்தின் முப்படைகளும் இணைக்கப்பட்டு ஒரு தலைமை தளபதியின் கீழ் கொண்டு வரப்பட்டது. அப்படி முதல் தலைமை தளபதியாக பொறுப்பேற்றவர் ஜெனரல் பிபின் ராவத். தமிழகத்தின் சூளூரில் இருந்து ஊட்டி வெலிங்கடனுக்கு ராணுவ ஹெலிகாப்டரில் சென்றார் அப்போது திடீரென மலையில் மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் பிபின் ராவத் உள்ளிட்ட அனைவருமே பலியாகினர்.
பிற பிரபலங்கள்
இது மட்டுமில்லாமல் காங்கிரஸின் மூத்த தலைவரும் விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த மாதவராஜ் சிந்தியா, லோக்சபா சபாநாயகர் பால யோகி, பிரபல தொழிலதிபரும் ஹரியானா அமைச்சருமான ஓம் பிரகாஷ் ஜின்டால், அருணாச்சல பிரதேசத்தின் முதல்வர் ஜோர்ஜே காண்டு ஆகியோரும் விமான விபத்தில் சிக்கி பலியான பிரபலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications