கடும் புகை மூட்டம்.. போகி பண்டிகையால் ஷாக்.. சென்னையில் விமான சேவை முற்றிலுமாக பாதிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை; சென்னையில் விமான சேவை கடுமையான பாதிப்பு அடைந்துள்ளது. போகி பண்டிகையால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக கடுமையான பாதிப்பு அடைந்துள்ளது.

போகி என்பது நான்கு நாள் பொங்கல் பண்டிகையின் முதல் நாளாகும். மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்திக்கு முந்தைய நாள் என்று இது அழைக்கப்படுகிறது. ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் பரவலாகக் கொண்டாடப்படுகிறது.

Air pollution in Chennai: Many flights could not take off or make landing

போகி நாளில், மக்கள் பழைய விஷயங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, புதிய விஷயங்களில் கவனம் செலுத்தி மாற்றம் அல்லது மாற்றத்தை ஏற்படுத்துவதே குறிக்கோள். விடியற்காலையில், மக்கள் வீட்டில் மரக் கட்டைகள், மற்ற திட எரிபொருள்கள் மற்றும் பயனற்ற மர சாமான்களைக் கொண்டு நெருப்பை கொளுத்துவார்கள். இதன் மூலம் ஆண்டுக் கணக்குகள் முடிவடைந்து, மறுநாள் அறுவடையின் முதல் நாளில் புதிய கணக்குகள் தொடங்கும். அதாவது தமிழ் புத்தாண்டும் இதற்கு மறுநாள்தான் தொடங்கும்.

பொங்கல் பண்டிகையின் போது மழை பொழிய வேண்டி இந்தினை மக்கள் வழிபடப்படுவதும் சில பகுதிகளில் வழக்கம். பழையன கழிதலும், புதியன புகுதலுமே பொங்கல் பண்டிகையின் நோக்கம் ஆகும்.

கொங்கு பகுதிகளில் இதே நாளில் காப்பு கட்டு விழாக்கள் நடப்பதும் வழக்கம். போகிக்கு மறுநாள் பொங்கல் செய்து சாப்பிடுவார்கள். மகாராஷ்டிராவில், மக்கள் பஜ்ராவில் செய்யப்பட்ட ரொட்டியை டில் தூவி சாப்பிடுகிறார்கள் மற்றும் காய்கறி குழம்புகளை செய்வார்கள், இதில் பாலக், கேரட், பட்டாணி, பச்சை சானா, பப்டி போன்றவை அடங்கும்.

மாசுபாடு: போவதாக போகி அன்று பழைய பொருட்களை எரிப்பதால் கடுமையான மாசு ஏற்படுவது வழக்கம். மாசுபாடு புதிய உச்சத்தை அடையும். தமிழ்நாடு முழுக்க இன்று பழைய பொருட்ளை எரித்து போகிப் பண்டிகையை மக்கள் கொண்டாடினர் .இதனால் சென்னையில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. பல பகுதிகளில் பகுதியில் பழைய பொருட்களை எரித்து போகி கொண்டாடிய பொதுமக்களால் சாலைகள் தெரியாத அளவிற்கு புகை ஏற்பட்டது.

விமான சேவை பாதிப்பு: அந்த வகையில் தற்போது சென்னையில் விமான சேவை கடுமையான பாதிப்பு அடைந்துள்ளது. போகி பண்டிகையால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக கடுமையான பாதிப்பு அடைந்துள்ளது.

ஓடுதளம் தெரியாத அளவிற்கு சாலைகளில் புகை மூட்டம் ஏற்பட்டு உள்ளது. சிங்கப்பூர், லண்டன் விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் தவித்து வருகிறது. ஹைதராபாத் விமானம் தரையிறங்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டது.

விமான பயணம்: பொங்கலை முன்னிட்டு பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். நீண்ட விடுமுறை காரணமாக பலரும் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய தொடங்கி உள்ளனர்.

இதற்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்களும் கூட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதே சமயமம் அவசரமாக சொந்த ஊர்களுக்கு விமானத்தில் செல்பவர்களும் இருக்கிறார்கள்.

ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரத்திற்கு பொங்கலுக்கு முன் விமானத்தில் செல்லும் பலர் உள்ளனர். சிலர் பொங்கல் அன்று அதிகாலை கூட செல்வார்கள்.அந்த வகையில் பலரின் பொங்கல் பயணம் தற்போது போகி காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் சென்னைக்கு திரும்புவது சிக்கலாக மாறி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+