Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐஸ்வர்யா வீட்டில் திருடியது எப்படி? எத்தனை சவரன் நகைகள் கொள்ளை? ஈஸ்வரியை கஸ்டடியில் எடுக்கும் போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் நகை, பணத்தை திருடிய பெண், அதை வைத்து நிலம் வாங்கி வீடு கட்டியுள்ளார். திருடிய நகைகளை விற்று அதில் தனது மகளுக்கு மளிகைகடை வைத்துக்கொடுத்ததோடு, அங்கிருந்து தனுஷ் வீட்டிற்கு மாதந்தோறும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மளிகைபொருட்கள் சப்ளை செய்து வந்து உள்ளார். தனது வீட்டில் இருந்து எத்தனை சவரன் நகைகளை திருடு போனது என்று ஐஸ்வர்யாவினால் சரியாக கூற முடியவில்லை என்பதால் ஈஸ்வரியை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா. நடிகர் தனுஷை கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அப்போது அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் பல கோடி மதிப்புள்ள நகைகளை சீர் வரிசையாக கொடுத்தார். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என்ற குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ் ஐஸ்வர்யா பிரிந்து வாழ்கின்றனர்.

குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டாலும் இருவருமே சினிமாவில் பிஸியாகி விட்டனர். ஐஸ்வர்யா கடந்த சில ஆண்டுகளில் இரண்டு வீடுகள் வரை மாறி விட்டார். சில மாதங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா தனது வீட்டின் லாக்கரை திறந்து பார்த்த போது அந்த பெட்டியில் இந்த பாரம்பரிய நகைகள் சுமார் 60 பவுனை காணவில்லை. தங்கம் மற்றும் வைர நகைகள் அதில் இருந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா, லாக்கரில் இருந்த நகைகள் மாயமானது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல் நிலையத்தில் புகார்

காவல் நிலையத்தில் புகார்

லாக்கரில் நகைகளை வைத்திருந்ததும், அதன் சாவி எங்கே இருக்கிறது என்பது தன்னுடைய வீட்டில் பணியாற்றும் மூன்று பேருக்கு நன்றாக தெரியும். நான் இல்லாத நேரத்தில் அவர்கள் சென்று வந்துள்ளனர். அதனால் அவர்களை விசாரிக்க வேண்டும் என்று அந்த புகார் கடிதத்தில் கூறியிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய ரகசிய விசாரணையில், ஈஸ்வரி என்ற பணிப்பெண் மீது சந்தேகம் எழுந்தது. அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். திருடிய நகைகளை விற்று சோழிங்கநல்லூரில் நிலம் வாங்கியதும், அதற்கு உடந்தையாக ரஜினியின் டிரைவர் இருந்ததும் தெரியவந்தது.

நகைகள் பறிமுதல்

நகைகள் பறிமுதல்

நகையை திருடிய பெண் பணியாளர் ஈஸ்வரி, நகையை விற்பனை செய்ய உதவிய டிரைவர் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஈஸ்வரியிடம் இருந்து 103 சவரன் நகை மற்றும் சுமார் 95 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நில பத்திரம், 30 கிராம் வைர நகைகள் 4 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

திருடு போன நகைகள் எவ்வளவு?

திருடு போன நகைகள் எவ்வளவு?

திருடப்பட்ட நகைகள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணத்தின் போது ரஜினிகாந்த் சீதனமாக கொடுத்த நகைகள் என்பதால்,பெரிய நிகழ்வுகளின் போது மட்டுமே அந்த நகைகளை அணிவதற்காக லாக்கரில் வைத்து இருந்தனர். திருமணத்திற்கு பிறகு மற்றும் நண்பர்கள் அன்பளிப்பாக அளித்த நகைகள் ஆகியவற்றையும் லாக்கரில் வைத்து இருந்ததால், எவ்வளவு நகைகள் இருந்தது என முறையாக கணக்கு தெரியாமல் இருந்துள்ளது. இதனால், புகாரில் தொலைந்து போன நகைகள் குறித்த முறையான தகவலை ஐஸ்வர்யா தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

திருடிய நகையில் சுக வாழ்க்கை

திருடிய நகையில் சுக வாழ்க்கை

ஐஸ்வர்யாவிடம் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஈஸ்வரி, திருடிய நகைகளை விற்பனை செய்து தனது மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்து, இரண்டாவது மகளுக்கு தொழில் தொடங்க மளிகைக்கடையையும் கணவர் அங்கமுத்துவிற்கு அதிக முதலீட்டுடன் கூடிய காய்கறி கடையும் வைத்துக் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். சோழிங்கநல்லூரில் இடம் வாங்கி வீடு கட்டிய ஈஸ்வரி அதனை வாடகைக்கும் விட்டு பணம் சம்பாதித்துள்ளார்.

டிரைவரிடம் கொடுத்து விற்பனை

டிரைவரிடம் கொடுத்து விற்பனை

திருடிய நகைகளை டிரைவர் வெங்கடேசனிடம் கொடுத்து நகைகளை 20 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். அதில் வெங்கடேசனின் பங்காக 9 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். கணவன் பெயரில் 350 கிராம் தங்க நகைகளை வங்கியில் அடமானம் வைத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. புகாரில் இருப்பதைவிட அதிகப்படியான நகை பணம் கைப்பற்றப்பட்டதால் , எவ்வளவு நகைகளை கொள்ளையடித்துள்ளார்கள் என்பது குறித்தும் புகாரில் தெளிவாக குறிப்பிட முடியவில்லை.

வேறு எங்கு திருட்டு

வேறு எங்கு திருட்டு

ஐஸ்வர்யாவின் வீடு தவிர நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் வீடுகளிலும் நகை, பணத்தை ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் திருடியுள்ளார்களா ? எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் வீட்டில் நகைகள் மற்றும் பணம் வேறு ஏதேனும் மாயமாகியுள்ளதா? எவ்வளவு நகைகள் மாயமாகியுள்ளது என்பது குறித்தும் காவல்துறையினர் விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருட்டு நகைகளை வாங்கியவர்

திருட்டு நகைகளை வாங்கியவர்

இதனிடையே ஐஸ்வர்யா வீட்டில் திருடிய நகைகளை ஈஸ்வரியிடம் இருந்து வாங்கியதாக மயிலாப்பூரை சேர்ந்த வினால்க் சங்கர் நவாலியை தேனாம்பேட்டையில் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 302 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். தோண்ட தோண்ட பூதம் போல நகை திருட்டு வழக்கில் நூற்றுக்கணக்கான சவரன் நகைகள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.

காவலில் எடுக்க திட்டம்

காவலில் எடுக்க திட்டம்

கடந்த 2006 முதல் ஐஸ்வர்யா வீட்டில் வேலை பார்க்கும் ஈஸ்வரி மற்றும் சுமார் 10 வருடமாக டிரைவாக பணிபுரியும் வெங்கடேசன் இருவரும் கூட்டு சேர்ந்து எத்தனை வருடம் நகைகளை திருடியுள்ளனர் என்றும் இத்தனை வருட காலம் சந்தேகம் வராமல் திருடியது எப்படி என்பது குறித்து எல்லாம் விரிவாக விசாரணை நடத்த கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் ஈஸ்வரியையும், டிரைவர் வெங்கடேசனையும் இரண்டு நாட்கள் சிறையில் எடுத்து விசாரிக்க காவல்துறையினருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. காவல்துறையினர் நடத்தப்போகும் விசாரணையில் ஈஸ்வரி சொல்லப்போகும் உண்மையால் என்னென்ன வெளிச்சத்திற்கு வரப்போகிறது என்று பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+