அஜித்தை உள்ளே இழுத்த சீமான்! பொன்ராஜ் விஷயத்தில்.. விஜய்க்கு ஆதரவளிக்காததற்கு காரணம் இதுதான்
சென்னை: பெண்கள் குறித்து பொன்ராஜ் அவதூறாக பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜய் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்கள், நடிகர் அஜித்தை பற்றியும், சிவகார்த்திகேயன் பற்றியும், என்னை பற்றியும் அவதூறாக பேசும்போது விஜய் எங்கு சென்றிருந்தார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தன்னை பற்றியும், சக நடிகர்களை பற்றியும் விஜய்யின் ஆதரவாளர்கள் அவதூறாக பேசும்போது விஜய் எங்கு போயிருந்தார்? என சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

என்ன பஞ்சாயத்து?
விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்று, அவரது மனைவி சங்கீதா குற்றம்சாட்டியிருந்தார். இப்படி இருக்கையில், இந்த விஷயத்தில் விஜய்க்கு சப்போர்ட் செய்து, அவரது ஆதரவாளர்கள் பெண்கள் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். இதில் பலரின் கருத்துக்களில் கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் இருந்தது. என்ன இப்படி கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்கிறார்களே! என விஜய்யின் ஆதரவாளர்களுக்கு பலரும் கேள்வி எழுப்பினர். சிலர் திட்டவும் செய்தனர்.
பொன்ராஜ் மீது புகார்
அப்படித்தான் பொன்ராஜ், திட்டியிருந்தார். ஆனால், அவரது பேச்சில் பெண்களுக்கு எதிரான கண்ணியம் குறைவான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இப்படியான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்க கூடாது. இந்நிலையில் இதை பிடித்த தவெகவினர், உடனடியாக பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். விஜய் நேரடியாக பொன்ராஜ் மீது புகார் அளித்திருந்தார். பொன்ராஜ் பெண்களை தரக்குறைவாக பேசுகிறார், எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
அஜித்துக்கு அவமானம்
இந்த விஷயம் குறித்த செய்தியாளர்கள் சீமானிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்ததாவது, "விஜய்யின் ஆதரவாளர்கள் பலர், என்னையும் எனது குடும்பத்தினரையும், நடிகர்கள் சிவகார்த்திகேயன், அஜித் குடும்பத்தினரையும் அவதூறாக பேசி வருகின்றனர். தூய்மைப்பணியாளர்கள் குறித்து விஜய்யின் ஆதரவாளர்கள் பேசிய பேச்சு கடும் கண்டனத்திற்குரியவை. அப்போது இந்த விஷயத்தில் தலையிட்டு, கண்ணியம் குறைவாக விமர்சிக்க கூடாது என்று ஏன் விஜய் தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிடவில்லை?
சீமான் கேள்வி
அப்படி செய்திருந்தால், தற்போது பொன்ராஜ் மீது விஜய் கொடுத்த புகாருக்கு ஆதரவளித்திருப்பேன். இப்படி புகார் அளிக்க விஜய்க்கு அனைத்து தகுதிகளும் இருந்திருக்கும். என் மீது பரப்பப்பட்ட அவதூறுகளுக்கு ஒரு புத்தகத்தையே போடலாம். அதை ஏன் விஜய் தடுக்கவில்லை? அதை தடுக்காமல், தற்போது பொன்ராஜ் மீது புகார் கொடுப்பதை எப்படி புரிந்துக்கொள்வது?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
-
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
விஜய்யுடன் டெல்லி பயணித்த அந்த இளைஞர் யார்? போகுமிடமெல்லாம் கூடவே இருந்தாரே.. பின்னணி -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா












Click it and Unblock the Notifications