“ஜென்டில்மேன் டிரைவர்” விருதை வென்ற நடிகர் அஜித் குமார்.. பெருமையுடன் ஷாலினி பகிர்ந்த படம்!
சென்னை: நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமாருக்கு இந்த ஆண்டின் ஜென்டில்மேன் டிரைவர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இத்தாலியில் வழங்கப்பட்ட இந்த விருது குறித்து அஜித்தின் மனைவி ஷாலினி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
பிரெஞ்சு தொழிலதிபரும், கார் பந்தய வீரருமான மறைந்த பிலிப் சாரியோல் (Philippe Charriol) நினைவாக இத்தாலியின் வெனிஸ் நகரில் வழங்கப்படும் 'ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025' (Gentleman Driver of the Year 2025) விருதை, இந்திய நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் பெற்றுள்ளார்.

பிலிப் சாரியோல் மோட்டார்ஸ் போர்ட்ஸ் குழுமம் மற்றும் SRO மோட்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் இணைந்து இத்தாலி தலைநகர் வெனிஸில் 'ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025' என்ற விருதை நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமாருக்கு வழங்கி கெளரவித்துள்ளது.
இந்த விருது, பொழுதுபோக்கிற்காகவும் ஆர்வத்திற்காகவும் பந்தயத்தில் ஈடுபடும் வீரர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு சர்வதேச அளவில் மோட்டார் ஸ்போர்ட்டில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டியதற்காக அஜித் குமாருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
அஜித்தின் மனைவி ஷாலினி, இந்தச் செய்தியை உறுதிப்படுத்தி, வெனிஸ் நகரில் நடந்த விருது விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். பிலிப் சாரியோல் நினைவாக வெனிஸில் வழங்கப்படும் இந்தாண்டுக்கான ஜென்டில்மேன் டிரைவர் விருது வென்ற எனது கணவரின் அருகில் நிற்பதில் பெருமை அடைகிறேன் எனக் கூறியுள்ளார்.
நடிகர் அஜித் குமார், சினிமாவில் நடிப்பதைத் தாண்டி தனக்கு மிகவும் பிடித்த கார் பந்தயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். ஐரோப்பாவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்தின் அணி சாதனை படைத்தது. சமீபத்தில், இந்திய அரசின் பத்மபூஷன் விருதை அஜித் பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications