தமிழ்நாட்டில் தமிழை திணிக்கிறாங்க.. அது அவ்வளவு முக்கியமான மொழி இல்லை.. பாஜக ஆலிஷா பகீர்!
சென்னை: தமிழகத்தில் தமிழை திணிக்கிறார்கள், அந்த மொழியை கற்பது அந்த அளவுக்கு முக்கியமானது அல்ல என்றும் பாஜக பெண் நிர்வாகி ஆலிஷா அப்துல்லா பகீர் கிளப்பியுள்ளார்.
இந்தி திணிப்பு குறித்து அண்மைக்காலமாக பேசப்பட்டு வருகிறது. இந்திக்கு இணைப்பு மொழி ஆங்கிலம்தான் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால் தமிழ்மொழிதான் இணைப்பு மொழி என தமிழகத்தில் உள்ள பெரும்பாலானோர் தெரிவிக்கிறார்கள்.
மேலும் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்களும் அவ்வப்போது நடைபெறுகின்றன. இந்தி திணிப்புக்குத்தான் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம், இந்தி மொழிக்கு அல்ல என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

பிராந்திய மொழி
பொது இடங்களில் பிராந்திய மொழியில் எழுதப்பட்டிருந்ததை அழித்துவிட்டு இந்தியில் சிலர் எழுதுவது அதை பிராந்திய மொழி பற்றாளர்களும் போராளிகளும் கருப்பு மை பூசி அழித்துவிட்டு பிராந்திய மொழிகளில் எழுதுவதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும் பிற மாநிலங்களில் உள்ள இந்த கல்வி நிறுவனங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்தது.

ஐநா சபை
அத்துடன் ஐநா சபையின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தியை ஆக்க வேண்டும் என்றும் அந்த குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் அண்மையில் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு தன் 11 ஆவது அறிக்கையை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் தாக்கல் செய்தது. இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தியை படிப்பது ஏன்
இந்த நிலையில் இந்தியை படிப்பது கட்டாயம் ஏன் என்பது குறித்து பாஜக நிர்வாகியும் கார் பந்தய சாம்பியனுமான ஆலிஷா அப்துல்லா பல செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில் அந்த பேட்டிகளில் அவர் கூறும் முக்கிய கருத்து, இந்தியை படித்தால் டெல்லி சாலையில் இரவு நேரத்தில் செல்லும் போது பெண்ணை யாராவது பாலியல் தொல்லை கொடுத்தால் இந்தியில் கெட்ட வார்த்தையில் திட்டிவிடலாம்.

அதிர்ச்சி தகவல்
இதனால் அவர்கள் அந்த பெண்ணை விட்டுவிட்டு போய்விடுவார்கள் என இவர் அளித்துள்ள இந்த விளக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது போல் இவர் தமிழ் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழ் மொழி குறித்த இவரது கருத்தை மட்டும் நெட்டிசன்கள் வைரலாக்கி கிண்டல் செய்து வருகிறார்கள்.

தமிழில் ஃபெயில்
அந்த வகையில் அவர் பேசுகையில் சின்ன வயதில் தமிழகத்தில் என்னை தமிழ் படிக்குமாறு கட்டாயப்படுத்தினார்கள். நான் தமிழில் 3 முறை தோல்வி அடைந்தேன். அப்படியும் என்னை விடாமல் தமிழ் படிக்கச் சொன்னார்கள், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களை படிக்கவிடாமல் தினமும் தமிழை படிக்க வைத்தது திணிப்பாகவே நான் பார்க்கிறேன். இந்த தமிழ் திணிப்பு குறித்து யாருமே பேச முன்வரவில்லையே.

தமிழ் திணிப்பு
தமிழகத்தில் எத்தனையோ பள்ளிகளில் வெளிநாட்டு மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களை தமிழ் படிக்குமாறு திணிக்க முடியுமா. தமிழ் படிக்கும் அளவுக்கு முக்கியமான மொழியே கிடையாது. என் பெற்றோர் யாருக்குமே தமிழ் தெரியாத போது என்னை தமிழ் படிக்கச் சொன்னால் எப்படி படிக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். அது போல் மற்றொரு சேனல் பேட்டியில் இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இதைத்தான் நெட்டிசன்கள் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications