கொரோனா முடியும் வரை காணொளி காட்சி மூலமாக மட்டுமே வழக்குகள் விசாரணை.. பார் கவுன்சில் கோரிக்கை
சென்னை: கொரோனா தொற்று பரவல் முடிந்து இயல்பு நிலை திரும்பும் வரை தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் காணொளி காட்சி மூலமாக மட்டுமே வழக்குகளை விசாரிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நீதிமன்றங்களுக்கு மே மாதம் அறிவிக்கப்பட்டிருந்த கோடை விடுமுறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது பல நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, பாதுகாப்பான முறையில் நீதிமன்றத்தை நடத்த போதிய வசதிகள் இல்லாத கீழமை நீதிமன்றங்களில் காணொளி காட்சி மூலமாக மட்டுமே வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தமிழக மற்றும் புதுவை அரசுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வழக்கமாக ஆண்டு தோறும் மே 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை விடப்படும் கோடை விடுமுறை ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் அண்மையில் அறிவித்தார்
அவர் தனது அறிவிப்பில் "மே 2 முதல் 31 ம் தேதி வரை வழக்கம் போல் நீதிமன்றம் செயல்படும். "தமிழகம், புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் கோடை விடுமுறையும் ரத்து செய்யப்படுவதாக கூறியிருந்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications