மகளிர் உரிமைத்தொகை ரூ.1000.. முகாமில் விண்ணப்பித்தால் எப்போ கிடைக்கும்? புது அப்டேட் கொடுத்த உதயநிதி
சென்னை: தமிழகத்தில் விடுபட்ட, அனைத்து தகுதி வாய்ந்த பெண்களுக்கும் இன்னும் 2 மாதங்களில் 'மகளிர் உரிமைத்தொகை' ரூ. 1000 வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேர்வதற்கான சிறப்பு முகாம் வரும் 15 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிக்கும் பெண்களுக்கு எப்போது முதல் ரூபாய் 1000 கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு விடை அளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

சிறப்பு முகாம்கள்
மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்ட முகாம் வரும் ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி, நவம்பர் மாதம் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 4 கட்டங்களாக 360 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இந்த முகாமில் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் யாராவது இருந்தால், முகாம் நடைபெறும் நாளில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பிக்கலாம். அந்த மனுக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு 45 நாட்களில் உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறுவதற்கான நிபந்தனைகளும் தளர்த்தப்பட்டுள்ளன.
உதயநிதி பேச்சு
இந்நிலையில், திருவண்ணாமலையில் இன்று நடைபெற்ற திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களினால் நாட்டிலேயே வளரும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசுக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். பாஜக அரசு என்றால் பாசிசம். கடந்த 10 ஆண்டு கால அதிமுக அரசை அடிமை மாடல் அரசு எனலாம்.
நமது அரசை திராவிட மாடல் அரசு என்று பெருமையாக சொல்கிறோம். ஆட்சி அமைந்தவுடனே முதல்வர் கையெழுத்திட்டது மகளிருக்கான விடியல் பயணத் திட்டம் தான். இந்த திட்டத்தால் 4 ஆண்டுகளில் மட்டும் 730 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டு இருக்கின்றனர். அதுதான் அந்த திட்டத்தின் வெற்றி.
மகளிர் உரிமைத்தொகை
பெண்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் புதுமைப் பெண் திட்டம். 8 லட்சம் பேர் இந்த திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர். முதல்வர் காலை உணவுத் திட்டத்தில் நல்ல தரமான உணவு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 1ம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள 20 லட்சம் குழந்தைகள் இந்த திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.
இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் திட்டம் மகளிர் உரிமைத் தொகை திட்டம். 22 மாதங்களாக 1. 15 கோடி பேர் மாதம் தோறும் மகளிர் உரிமைத் தொகையை பெற்று வருகின்றனர். இன்னும் 2 மாதங்களில் தமிழகத்தில் தகுதியான அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்க ஆரம்பிக்கப்படும்.
மக்கள் மத்தியில் வரவேற்பு
இந்த திட்டங்கள் பெரியளவில் தமிழகத்தில் வரவேற்பை பெற்றுள்ளதால் மத்திய அரசு தமிழகத்துக்கு, தமிழக மக்களுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கை என்ற குறுக்கு வழி மூலம் ஹிந்தியை தமிழகத்தில் நுழைக்க பார்க்கின்றனர். மறு சீரமைப்பு என்று கூறி லோக்சபா தொகுதிகளை குறைக்கப் பார்க்கின்றனர்.
தமிழகத்தின் நிதி உரிமையை பறிக்கும் வேலைகளை மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தேர்தல் ரேஸில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம். தமிழக மக்கள் திமுகவை நோக்கி ஆதரவாக வருவதை பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு எரிச்சல் வருகிறது." எனப் பேசியுள்ளார்.
-
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications