திடீர் ரெய்டு! முன்கூட்டியே கசிந்தது எப்படி? ஒரே நேரத்தில் பார்களை மூடிய மர்மம், யாரந்த கருப்புஆடு?
சென்னை: தஞ்சாவூரில் சட்டவிரோத பாரில் விஷம் கலந்த மது அருந்திய இரண்டு பேர் உயிரிழந்த காரணத்தால், சட்டவிரோத பார்கள் மீது ரெய்டு நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ரெய்டு குறித்த தகவல் முன்கூட்டியே கசிந்த காரணத்தால், சட்டவிரோத பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
சென்னையில் சட்ட விரோத பார்களில் இரவு நேரங்களில் பிளாக்கில் சரக்கு வாங்க செல்லும் குடிமகன்கள் சரக்கு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இந்த தகவலை குடிமகன்கள் தெரிவித்தனர். இதுபற்றி குடிமகன்கள் சிலர் கூறுகையில், சென்னையில் பல பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகயை ஒட்டிய பகுதியில் கடை திறக்கும் முன்பும் சட்ட விரோத பார்கள் இயங்கி வந்தன. இரவு 10 மணிக்கு மேல் காலை 12 மணி வரை பிளாக்சில் சரக்குக்கள் சட்டவிரோதமாக விற்பனையும் செய்யப்படும். 70 ரூபாய் அதிகமாக கொடுத்தால் எந்த சரக்கும் இரவு நேரத்தில் கிடைக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக இரவில் சட்ட விரோதமாக இயங்கும் பார்களில் சரக்குகள் விற்பனை செய்யப்படுவது இல்லை. சட்டவிரோத பார்கள் அனைத்தும் மூடிய கிடக்கின்றன என்று கூறினார்கள்.

சென்னையில் மட்டுமின்றி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், தேனி, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம் என தமிழகத்தின் பல பகுதிகளிலும் சட்டவிரோதமாக இயங்கிவந்த பார்கள் மூடிக்கிடப்பதாக குடிமகன்கள் தெரிவிக்கிறார்கள்.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து பெண்கள் உள்பட 22 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவத்தின் சுவடுகள் மறைவதற்குள் தஞ்சாவூர் அருகே மதுகுடித்த 2 பேர் பலியானார்கள். அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனால் சட்டவிரோத பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் சட்டவிரோத பார்கள் மீது நடவடிக்கை பாயத்தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதியின்றி டாஸ்மாக் அருகே செயல்படும் பார்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்குமாறு எஸ்பி சீபாஸ் கல்யாண் உத்தரவிட்டார்.
திருத்தணி கோட்டத்திற்கு உட்பட்ட பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி, கே.ஜி. கண்டிகை, அத்திமாஞ்சேரிபேட்டை, திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் பகுதிகளில் உள்ள சட்டவிரோத பார்களும் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 5 பார்களும், சிப்காட் பகுதியில் 6 பார்களும், ஆரம்பாக்கத்தில் 3 பார்களும், கவரைப்பேட்டையில் 4 பார்களும், பாதிரிவேட்டில் ஒரு பார் என கும்மிடிப்பூண்டி தாலுகாவில் அனுமதியின்றி இயங்கி வந்த மொத்தம் 19 பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காவல் உட்கோட்டங்களில் சிவகாசி 25, ராஜபாளையம் 25, ஸ்ரீவில்லிபுத்தூர் 20, விருதுநகர் 18, அருப்புக்கோட்டையில் 11, சாத்தூர் 8, திருச்சுழி 14 என மொத்தம் 121 இடங்களில் அனுமதி இன்றி செயல்படும் பார்களில் ஆய்வு செய்து 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட டி.எஸ்.பிக்களுக்கு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தவிட்டார்.
இதையடுத்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆயத்தமாகி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் தற்போது சட்டவிரோத பார்கள் மூடப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகு இயங்கிய உரிமம் பெற்ற பார்களும் இப்போது இரவு 10மணிக்கு மேல்சரக்குகள் விற்பது இல்லை என்று குடிமகன்கள் கூறுகிறார்கள். முன்கூட்டியே எப்படி ரெய்டு குறித்து தகவல் கசிந்தது என்று தெரியவில்லை. இந்நிலையில் யாரந்த கருப்பு ஆடு என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications