இது லிஸ்ட்லேயே இல்லையே.. டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது 3 நாட்கள் அல்ல.. மொத்தம் 4 நாட்கள்
சென்னை: ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், நாளை முதல் தேர்தல் நடைபெறும் வரும் 19ம் தேதி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுபானக்கடைகளும் தமிழ்நாடு முழுவதும் மூடப்படுகிறது... இதேபோல் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 21ம் தேதியும் மதுக்கடைகள் மூடப்படுகிறது.
17வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் 16ந் தேதி நிறைவு பெறுகிறது. இதையொட்டி 18வது லோக்சபா உறுப்பினர்களை தேர்வு செய்யும் நாடாளுமன்ற தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பதை கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி ஏப்ரல் மாதம் 19ந் தேதி முதல் ஜூன் 1ந் தேதி முடிய 7 கட்டங்களாக இந்தியாவில் தேர்தல் நடைபெறுகிறது.

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ந் தேதி, 2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ந் தேதி, 3ம் கட்ட தேர்தல் மே 7ந் தேதி, 4ம் கட்ட தேர்தல் மே 13ந் தேதி, 5ம் கட்ட தேர்தல் மே 20ந் தேதி, 6ம் கட்ட தேர்தல் மே 25ந் தேதி, 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ந் தேதிகளில் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முதல் கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ந் தேதி தமிழ்நாடு (ஒரே நாளில்), உத்தரகாண்ட், மத்தியபிரதேசத்தில் ஒருபகுதி, உத்தரபிரதேசத்தின் ஒருபகுதி, ராஜஸ்தானின் ஒரு பகுதி, சிக்கிம், மேகாலயா, திரிபுரா, அசாமின் ஒருபகுதி, மேற்கு வங்காளத்தின் ஒருபகுதி, மிசோரம், நாகாலாந்து, அருணாசலபிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் பீகாரில் 4 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் ஆகியவற்றில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகளில் மதுக்கடைகள் தேர்தலுக்கு இரண்டு நாள் முன்பே மூடப்படுவது வழக்கம்... அந்த வகையில் நாளை முதல் 3 நாட்கள் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூடப்பட உள்ளது. இதேபோல் வாக்கு எண்ணிக்கை அன்றும் மதுக்கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு, நாளை முதல் 19ம் தேதி வரையிலும் மற்றும் 4.6.2024 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அன்று மட்டும் தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் மதுபான கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் இயங்கி வருகின்ற தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் மதுபான கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மூடிட ஆணையிடப்படுகிறது. எனவே, அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் மதுபான கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதனிடையே அரசு வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள் மற்றும் பார்கள், பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஓட்டல், சுற்றுலாத்துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள், மிலிட்டரி கேண்டீன்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் உள்ளிட்டவை அனைத்தும் மகாவீர் ஜெயந்தி நாளான வருகிற 21-ந் தேதி (ஞாயிற்றுகிழமை) மற்றும் தொழிலாளர் தினமான வருகிற 1-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மூட உத்தரவிடப்படுகிறது. விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதிகளில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் மதுபான வகைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது மதுபான வகைகளை ஓரிடத்திலிருந்து பிற இடத்திற்கு எடுத்துச் சென்றாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்ட விதிமுறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications