வீட்டு உரிமையாளர்களை பாதுகாக்க லீஸ் / வாடகை ஒப்பந்தத்தில் இதெல்லாம் கட்டாயம் இருக்க வேண்டும்
சென்னை: வீட்டு உரிமையாளர்கள் லீசுக்கோ அல்லது வாடகைக்கோ வீடுகளை விடும் போது, வாடகை ஒப்பந்தங்களில் இந்த விஷயங்களை எல்லாம் கவனமாக சேர்க்க வேண்டும். அப்படி ஒப்பந்தம் போட்டால் மட்டுமே வீட்டு உரிமையாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள். இதுபற்றி வழக்கறிஞர்கள் கூறும் தகவல்களை இப்போது பார்ப்போம்.
சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் மோசமான அணுகுமுறை உடையவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு அல்லது லீசுக்கு விட்டு அவதிப்படுவது அடிக்கடி நடக்கிறது. இது போன்றவர்களிடம் சட்டப்பாதுகாப்புடன் இருக்க, வாடகை ஒப்பந்தங்களில் இந்த உட்பிரிவுகள் எல்லாம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதனை வீட்டு உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

லீசுக்கு வாங்கிய வீட்டின் சொத்தை சேதப்படுத்துதல், அதை சரியாக பராமரிக்காமல் இருப்பது, சட்டவிரோத நோக்கங்களுக்காக வீட்டை பயன்படுத்துதல், குத்தகை ஒப்பந்தம் முடிந்த பிறகு காலி செய்யாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க வீட்டின் உரிமையாளர்கள் ஒப்பந்தத்திலேயே தெளிவாக குறிப்பிடுவது தான் சரியாக இருக்கும் என்று வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.
டிஎஸ்கே லீகல் பார்ட்னர் மிதாலி நாயக் இதுபற்றி கூறும் போது, "கடந்த பத்தாண்டுகளில் சொத்துக்களை வாடகை அல்லது லீசுக்கு விடும் செயல்முறை மிகப்பெரிய அளவில் மாறி உள்ளது. எனவே வீட்டின் உரிமையாளர்கள் பல அம்சங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
சொத்து லீசுக்கு விடப்பட்ட பிறகு ஏற்படும் சிக்கல்கள் மற்றும் சட்ட சிக்கல்களைத் தவிர்க்க ஒரு விரிவான குத்தகை ஒப்பந்தம் செய்வது அவசியம் ஆகும். வீட்டு உரிமையாளர்கள் குத்தகைதாரர்களிடமிருந்து வாய்வழி வாக்குறுதிகளை எந்த காரணம் கொண்டும் நம்பக்கூடாது. லீசுக்கு வீடுகளை வழங்கும் போது, குத்தகையின் விதிமுறைகளை தெளிவாக குறிப்பிட்டு குத்தகைதாரருடன் எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். அதில் சில அத்தியாவசிய உட்பிரிவுகள் இருப்தையும் வீட்டு உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.
அதன்படி வீட்டு உரிமையாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க வாடகை ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறும் சில விஷயங்களை இப்போது பார்ப்போம். மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின் இதுபற்றி கூறும் போது, "வாடகை அல்லது குத்தகை ஒப்பந்தத்தில் வீட்டை வாடகைக்கு அல்லது லீசுக்கு எடுப்பதன் நோக்கம் குறிப்பிடப்பட வேண்டும். வாடகை ஒப்பந்தமானது "குத்தகைதாரர் மற்றும் அவரைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களின் குடியிருப்பு நோக்கங்களுக்காக" போன்ற குறிப்பிட்ட நோக்கத்தை ஒப்பந்தத்தில் தெளிவாக வலியுறுத்த வேண்டும்.
எனவே குத்தகைதாரர் வளாகத்தை வணிக நோக்கங்களுக்காக (ஒப்பந்தத்தில் குறிப்பிடாத வரை) பயன்படுத்துவதில்லை என்பதையும். குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்கள் அங்கு வசிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதை ஒப்பந்தம் தெளிவாக குறிப்பிட வேண்டும். வாடகை ஒப்பந்தத்தில், குத்தகைதாரருக்கு வளாகத்தைப் பயன்படுத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும், அதே நேரத்தில் வளாகத்தின் உடைமையும் உரிமையும் வீட்டு உரிமையாளரால் தக்கவைக்கப்பட வேண்டும் என்றார்
இதனிடையே மேக்னா மிஸ்ரா என்பவர் இதுபற்றி மேலும் கூறுகையில், உங்கள் வீட்டில் பீரோ, பேன், அலமாரிகள் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் தனியாக பொறுத்தப்பட்டிருந்தால், செமி ஃபர்னிஷ் செய்யப்பட்டிருந்தால், அவை உடைந்தால் யார் பொறுப்பு என்பதை ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும். இதேபோல் டைல்ஸ், கதவு போன்றவை உடைந்தால் யார் பொறுப்பு என்பதையும் குறிப்பிட வேண்டும்.
வாடகை ஒப்பந்தத்தின் காலம்: வீட்டுச் சொத்து எந்த காலத்திற்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது அல்லது லீசுக்கு விடப்பட்டுள்ளது என்பதை வாடகை ஒப்பந்தத்தில் வீட்டு உரிமையாளர்கள் தெளிவாக குறிப்பிட வேண்டும். ஒப்பந்தம் முடிவதற்குள் வாடகைதாரர் வீட்டை விட்டு வெளியேற விரும்பினால், ஏற்படும் விளைவுகளை வாடகை ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும்
பெரும்பாலும் வீட்டு உரிமையாளர் வீட்டை வர்ணம் பூசுவதற்கும் வாடகை நோக்கங்களுக்காக தயார் செய்வதற்கும் சில நிலையான செலவை செய்ய வேண்டி உள்ளது. சில நேரங்களில், குத்தகைதாரருக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட வண்ணப்பூச்சு வண்ணம் செய்யப்படலாம். வீட்டிற்கான குத்தகைதாரரைக் கண்டுபிடிப்பதற்காக வீட்டு உரிமையாளர் ஒரு தரகரிடம் கமிஷனும் செலுத்த வேண்டியிருக்கும். குடியிருப்பாளர் வீட்டிற்கு வந்து விரைவில் காலி செய்தால், அடுத்த வாடகைதாரருக்கு இந்த செலவுகளை மீண்டும் ஏற்க செய்யலாம். இதன் விளைவாக, வாடகைதாரர் மாதாந்திர வாடகையில் இருந்து இந்தச் செலவுகளைத் திரும்பப் பெறுவதற்கு அந்த வீட்டில் நீண்ட காலம் தங்கியிருப்பது முக்கியமாகிவிடும். எனவே விரைவில் வீட்டை காலி செய்ய மாட்டார்.
மேலும் ஒப்பந்தத்தை முடிப்பதற்கான அறிவிப்பு காலத்தை ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும் .மேலும் வாடகை ஒப்பந்தத்தில் வாடகைதாரர் மூன்றாம் தரப்பினருக்கு குத்தகையை மாற்ற முடியாது என்று தெளிவாக குறிப்பிட வேண்டும். மேலும் அபாயகரமான பொருட்களைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும்.மேலும் வீட்டு வளாகத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
வீட்டின் பழுது மற்றும் பராமரிப்பு: வாடகை ஒப்பந்தத்தில் வீட்டு உரிமையாளரால் செய்யப்பட வேண்டிய பழுது மற்றும் பராமரிப்பு வகைகளைக் குறிப்பிடும் ஒரு விதியை சரியாக சேர்க்க வேண்டும். குத்தகைக் காலத்தில் வீட்டில் பழுது ஏற்பட்டால், வீட்டு உரிமையாளரின் பொறுப்பு இவை தான் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மேலும் வீட்டின் அன்றாட பழுதுகளுக்கு தாங்கள் பொறுப்பு அல்ல என்பதையும் குறிப்பிட வேண்டும். அதேநேரம் வாடகை ஒப்பந்தத்தில், வீட்டு வளாகத்தில் எந்த கட்டமைப்பு மாற்றமும் செய்யப்படக்கூடாது என்பதைக் குறிப்பிட வேண்டும். வாடகைதாரர் வீட்டில் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், அது வாடகை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.
குத்தகைக் காலம் முடிவடைந்தவுடன் வாடகைதாரர் வீட்டை ஒப்படைக்கத் தவறினால் ஏற்படும் பாதிப்புகளை ஒப்பந்தம் தெளிவாக இருக்க வேண்டும். அதேநேரம் வாடகை ஒப்பந்தம் வாடகைதாரரை வெளியேற்றுவதற்கான காரணங்களைக் குறிப்பிட வேண்டும்.
வாடகை ஒப்பந்தத்தின் பதிவு: எல்லாவற்றிற்கும் முக்கியமாக வாடகை ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுவதை வீட்டு உரிமையாளர் உறுதி செய்வது அவசியம். அப்போது தான் எந்த ஒப்பந்தமும் சட்ட ரீதியாக செல்லும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications