தற்கொலை செய்ய முடிவு செய்தேன்.. ககன்தீப் சிங் மீது ஐஏஎஸ் அதிகாரி பரபரப்பு புகார்.. விசிக எம்பி ஷாக்
சென்னை: சென்னை மாநகராட்சியில் துணை ஆணையராக இருந்த தான் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் ஆணையராக இருந்த ககன்தீப் சிங் பேடி துன்புறுத்தியதாக குற்றம்சாட்டிய ஈரோடு கூடுதல் ஆட்சியர் மணீஷ் நரவனே தான் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு சென்றதாகவும் பகீர் புகாரை அளித்துள்ளார்.
தமிழகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி. இவர் பேரிடர் காலத்தில் அந்த பகுதி மக்களுக்கு ஆற்றியத் தொண்டு அனைவருக்குமே தெரியும். ஒரு முறை கடலூரில் அதிகாரியாக இருந்த போது புயல் ஓய்ந்துவிட்டது என்பதால் தனது குடும்பத்தினரை பார்க்க சென்னை வந்தார்.

பின்னர் புயல் முடியவில்லை மீண்டும் கடலூரில் கனமழை அறிந்தவுடன் இரவு நேரம் என்றும் பார்க்காமல் அவசரமாக கிளம்பி கடலூர் வந்தார் ககன்தீப் சிங் பேடி. இப்படி சுனாமி, வெள்ளம், மழை என அனைத்து பேரிடர் காலங்களிலும் சிறப்பாக பணியாற்றி பாராட்டுகளை பெற்றவர்.
கடந்த அதிமுக ஆட்சியில் வேளாண் துறை செயலாளராக ககன்தீப் சிங் இருந்தார். அப்போது கஜா புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களையும் திறமையாக கையாண்டார். மேலும் பயிர்களை சேதப்படுத்திய வெட்டுக்கிளிகளை அழிக்க நவீன முறைகளை கையாண்டு விவசாயிகளின் பாதுகாவலனாக இருந்தார்.
இப்படிப்பட்ட அதிகாரி மீது ஒரு ஐஏஎஸ் அதிகாரி புகார் கூறியுள்ளார். திமுக ஆட்சி அமைந்ததும் சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டார். அப்போது துணை ஆணையராக மணீஸ் நரவனே பணியாற்றி வந்தார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மணீஸ் நரவனே ஈரோடு கூடுதல் ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தற்போது சுகாதாரத் துறை செயலாளராக இருக்கும் ககன்தீப் சிங் மீது புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து நரவனே இரு பக்க கடிதத்தை தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ளார். அந்த புகாரில் சென்னை மாநகராட்சியில் துணை ஆணையராக இருந்த என்னை பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் ககன்தீப் சிங் மிகவும் துன்புறுத்தினார்.
சென்னை மாநகராட்சி சார்பில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் மாநகராட்சிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது நீ புத்த மதத்தை பின்பற்றிக் கொண்டு ஏன் உஜ்ஜைனி கோயிலுக்கு சென்றாய் என கேட்டு ககன் தீப் சிங் காயப்படுத்தினார். சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூட்டத்தில் வேண்டுமென்றே என்னை திட்டி அவமானப்படுத்தி உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினார்.
இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கும் தனக்கும் பிரச்னையை உருவாக்க ககன்தீப் சிங் பேடி முயற்சி செய்தார். மாநகராட்சியின் கோப்புகளில் வேண்டுமென்றே கையெழுத்திடாமல் இரவு வரை காத்திருக்க செய்தார்.
ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக, மூத்த அதிகாரியாக இருந்து கொண்டு அவர் செய்த இந்த செயல்கள் அனைத்துமே எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது. சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் என்று கோருவதாக மணீஸ் நரவனே பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். தனக்கு இக்கட்டான நேரத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா ஆறுதல் கூறி என்னைத் தேற்றியதாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் விழுப்புரம் எம்பி டாக்டர் ரவிக்குமார் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர்
@DrManishIAS தற்போதைய சுகாதாரத் துறை செயலாளர் திரு @GSBediIAS பற்றி கூறியிருக்கும் புகார் அதிர்ச்சி அளிக்கிறது.திரு பேடி கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் நான் MLA ஆக இருந்தேன்.அவர் பாகுபாடு காட்டி நான் பார்த்ததில்லை.
அவர் மீது யாரும் இப்படி புகார் சொல்லி நான் கேட்டதில்லை. உயர் அதிகாரிகள் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுகிறார்கள் என்பது கவலையளிக்கும் ஒரு குற்றச்சாட்டு. பொது வெளியில் ஒரு IAS அதிகாரி முன்வைத்துள்ள இந்தப் புகாரை மாண்புமிகு
@CMOTamilnadu அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications