சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் சாணக்கியன்... அதிமுக அழைப்பு குறித்து மனம் திறந்த டி.ராஜேந்தர்

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக, திமுக-விற்கு எதிராக களமிறங்கும் டி.ராஜேந்தர்- வீடியோ

    சென்னை: அதிமுக கூட்டணியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு அளிக்க முன்வந்ததாக லட்சிய திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

    சென்னை தியாகராயநகரில் உள்ள தனது இல்லத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கட்சிப் பொறுப்பாளர்களிடம் ஆலோசனை நடத்தியதில், அவர்கள் விருப்ப மனுவை கொடுக்கவும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்.

    Alliance call came from AIADMK Says t.rajendar

    ஆகவே, இந்தத் தேர்தலில் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வேட்பாளர்களை நிறுத்துவது என முடிவு செய்திருக்கிறேன். அதற்கான விருப்பமனுக்கள் பெறப்படுகின்றன என்றார்.

    மேலும், தன்னை அதிமுக சின்னத்தில் போட்டியிடச் சொன்னதால் தான் சுயமரியாதையோடு வேண்டாம் என்று சொல்லி விட்டதாக தெரிவித்தார். செய்தியாளர்களை பார்த்து, நீ, வா, போ என்று சொல்ல மாட்டேன் எனக் கூறி பிரேமலதாவை அவர் விமர்சித்தார்.

    நான் சாணக்கியன். அதனால்தான் எதையும் யோசித்து முடிவெடுக்கிறேன் என்று கூறிய அவர், அதிமுகவில் இருந்து அழைப்பு வந்தது என்பதை நான் வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன் என்றார்.

    வடசென்னை, கள்ளக்குறிச்சி.. திமுக- தேமுதிக நேரடி மோதல்.. தேமுதிக நிச்சயம் அவுட்?வடசென்னை, கள்ளக்குறிச்சி.. திமுக- தேமுதிக நேரடி மோதல்.. தேமுதிக நிச்சயம் அவுட்?

    இரட்டை இலை சின்னத்தில் நிற்கச் சொன்னார்கள் என்றும்த னக்கு அப்படி நிற்பதில் விருப்பமில்லை என்றும் முடியாது எனவும் சொல்லிவிட்டதாக தெரிவித்தார்.

    அப்படியெனில் ராஜ்யசபா சீட் தருகிறோம், பிரச்சாரத்திற்கு வாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள் என்றும் தனக்கு அதிலும் உடன்பாடு இல்லை என மறுத்துவிட்டதாகவும் டி.ராஜேந்தர் கூறினார்.

    English summary
    T. Rajendra is open minded about the AIADMK alliance call
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X