காங்கிரஸ் கட்சியே 2ஆக பிளக்கும்.. தவெக நோக்கி திரும்புதா மேலிட பார்வை? கட்சிக்குள்ளேயே கொதிப்பு!
சென்னை: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் எழுந்துள்ளது வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளது. தொகுதிப் பங்கீட்டில் இரு தரப்புமே பிடிவாதமாக இருப்பதால் சீட் நம்பரை உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது. மேலிடத்தின் கவனம் விஜய் பக்கம் திரும்பி இருப்பதால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. டி.ஆர். பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு, தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளை ஒவ்வொன்றாக அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு
தற்போது வரை 2 கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த தொகுதி பங்கீடு குறித்தான ஒப்பந்தம் கையெழுத்தானது. முஸ்லீம் லீக் ஏணி சின்னத்திலும், மமக உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட உள்ளது.
காங்கிரஸ் கட்சி குழுவினர் கடந்த சனிக்கிழமை காலை அண்ணா அறிவாலயம் வந்து திமுக குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தக் குழு கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசியது. அப்போது, ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்றும் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என ஸ்டாலினிடம் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வலியுறுத்தி இருந்தார்.
கூட்டணியில் காங்கிரஸ்
ஆனால், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் ஏற்கவில்லை. இதை வெளிப்படையாகவே தெரிவித்தார். இதற்கிடையே மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் திமுகவை சீண்டி வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகி, விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்கக் கூடுமோ? என்ற சந்தேகங்களும் எழுந்தன.
எனினும், காங்கிரஸ் தலைமை, திமுக கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளதாக கூறப்பட்டது. திமுக எம்.பி கனிமொழி, ராகுல் காந்தியை சந்தித்தும் பேசி இருந்தார். திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் பேசக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இப்படியான சூஅலில் அண்மையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
காங்கிரஸ் கேட்கும் சீட் எண்ணிக்கை
இந்நிலையில் தான் திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளைக் கேட்டதாகவும், திமுக தரப்பில் 23 தொகுதிகளை வழங்குகிறோம் எனச் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் கட்சி, முன்பு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபோது 41 சீட்+ ராஜ்யசபா சீட் வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. எனினும், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் வருகை காரணமாக தற்போது சீட் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள முன்வந்துள்ளது. சனிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையின்போது, 39 சட்டசபை தொகுதிகள் வேண்டும் + 2 ராஜ்யசபா சீட் வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.
திமுக முடிவு
ஆனால், திமுக தரப்பிலோ, கூட்டணி விரிவடைந்துள்ளதால் எல்லா கட்சியுமே கடந்த தேர்தலை விட குறைவான தொகுதிகளில் தான் போட்டியிடுகிறோம், கூட்டணி பெரிதாகி உள்ளதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது, அதனை கருத்தில் கொண்டு சீட்களை கேட்க வேண்டும் என திமுக தரப்பில் கூறியுள்ளனர்.
அதற்கு காங்கிரஸ் குழுவினரோ, கடந்த முறையே, கூட்டணி நலன் கருதித்தான், கட்சியினரை சமாதானப்படுத்தி 25 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டோம், குறைவான தொகுதிகளில் போட்டியிட்டால் இங்கு கட்சியை வளர்க்க முடியாது எனக் கூறியுள்ளனர். இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பதாக திமுக குழு கூறியுள்ளது.
இழுபறி சூழல்
காங்கிரஸ் கட்சி கேட்கும் சீட் எண்ணிக்கையை குறைக்காமல் பிடிவாதமாக இருப்பதால் எந்த முடிவுக்கும் தயார் நிலையில் ஸ்டாலின் இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு ராகுல் காந்தி 'அண்ணன்' எனக் குறிப்பிடாமல் ட்வீட் செய்தது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
வழக்கமாக நெருக்கமான விளிப்போடு அழைக்கும் ராகுல் தேர்தல் நேரத்தில் பட்டும் படாமல் ட்வீட் போட்டது திமுக தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டாலினும் அதே பாணியில் சம்பிரதாய ரிப்ளை கொடுத்தார். இது அரசியல் அரங்கில் விவாதமாகி உள்ளது.
கிரிஷ் சோடங்கர் பேச்சால் சலசலப்பு
இதற்கிடையே, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளார் கிரிஷ் சோடங்கர், தவெகவுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருப்பதாக கூறியுள்ளார். இது திமுகவை சீண்டும் வகையில் அமைந்துள்ளது. இனி, கூட்டணியில் நீடிப்பதும் விலகுவதும் காங்கிரஸ் கட்சியின் கைகளில் தான் இருக்கிறது என்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு
ஒருவேளை, காங்கிரஸ் மேலிடம், தவெக கூட்டணி என்ற முடிவை எடுத்தால், கட்சியைப் பிளக்க சிலர் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. திமுக கூட்டணியை விரும்பும் காங்கிரஸ் தலைவர்கள், குறிப்பாக, சிட்டிங் எம்.எல்.ஏக்கள் தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தால் தமிழக காங்கிரஸ் கட்சியே இரண்டாக பிளக்கக்கூடும் என்ற நிலை இருப்பதாகவே தெரிகிறது.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications