காற்றுள்ள போதே தூற்றிக்கணுமே? பஞ்சு பஞ்சாய் போன விஜயின் வெயிட்டிங் பிளான்.. இங்கே கூட்டணி அரசியல் தந்த பாடம்
சென்னை: தமிழக அரசியல் தற்போது பரபரத்து காணப்படுகிறது... பல கட்சிகள் பல்வேறு மாவட்டங்களில் வலிமையான கூட்டணி சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், தவெக-வில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. அத்துடன், தவெக எடுத்து வரும் அரசியல் நகர்வுகள், அக்கட்சிக்கு பாதகமாக போகுமா? அல்லது சாதகமாக வந்தடையுமா? என்பதும் ஒரு விவாத பொருளாகவே சோஷியல் மீடியாவில் உலா வருகிறது.. அது என்ன தெரியுமா?
விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், திமுக கூட்டணி அசுர பலத்துடன் உள்ளது. அதிமுக, பாமக, அமமுக போன்ற கட்சிகள் தங்களது கூட்டணியை உறுதி செய்துள்ளன....

அத்துனை பிடிவாதத்துடன், காரசார விமர்சனங்களையும் வாரி தூற்றிக்கொண்டிருந்த டிடிவி தினகரன், எடப்பாடியையே ஒன்றிணைத்த பாஜகவுக்கு, பிரேமலதா, ஓபிஎஸ், கிருஷ்ணசாமி போன்ற சக்திகளை கூட்டணியில் சேர்ப்பது எளிதாக இருக்கும்.
ஏற்கனவே வட மாவட்டங்களில் பாமக, தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் அமமுக வாக்குகள் வலுவாக இருப்பதால், தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது சிறிது தெம்பாக உள்ளது. நாம் தமிழர் வழக்கம்போல் "என் வழி தனி வழி" ரூட்டில் களமிறங்குவதாக தெரிகிறது.
தவெக-வின் தனித்துவ நிலைப்பாடு:
இப்படிப்பட்ட சூழலில் தவெக தன்னுடைய தனித்துவத்தை வலியுறுத்துவதோடு, ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டணிகளை சேர்க்குமா அல்லது தனியாக நிற்குமா என்பது தெரியவில்லை.
காரணம், தவெக கட்சி இதுவரை தனித்துவத்தை முன்னிறுத்தி, பெரிய கூட்டணியில் சேரவில்லை. விஜய் வெளிப்படையாக கூட்டணி கதவைத் திறந்து பல மாதங்கள் ஆனாலும், கடந்த கால அரசியல் அனுபவம் இல்லாத காரணத்தால், தற்போதைய வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தவில்லை என்றே தெரிகிறது.
அதாவது வடக்கு, தெற்கு, டெல்டா மாவட்டங்களில் வாக்கு வங்கியை பலப்படுத்திக் கொள்வதற்காக, திமுக, அதிமுக அமைத்துள்ள தேர்தல் வியூகம் போல தவெக-வில் எதுவும் இதுவரை அமையாதது போலவே உள்ளது. பெரிய கட்சிகளை தவெக கைநழுவ விட்டுவிட்டது என்றால், சின்ன சின்ன கட்சிகளும்கூட இதுவரை கூட்டணிக்கு வரவில்லை.
எதிர்கொள்ளும் சவால்கள்
ஒருவேளை தவெக தனியாக நின்றால், ஆலமரம் போன்ற திமுக, அதிமுக போன்ற பெரிய கூட்டணிகளுடன் போட்டியிட முடியுமா என்பது சந்தேகமே. தனித்துவத்தை வலியுறுத்துவது என்பது, தவெக-வுக்கு ஒரு நீண்ட கால நோக்கில் நல்ல விஷயமாக இருக்கலாம். ஆனால் இப்போதைய தேர்தலில், அனுபவமுள்ள கூட்டணிகள் மற்றும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திய கட்சிகள் முன்னிலையில் உள்ளதை நாம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.
மூத்த தலைவர் செங்கோட்டையன் போன்றோர் தவெக பக்கம் இருந்தும்கூட, அமமுக, ஓபிஎஸ் அணி, வைத்திலிங்கம் உள்ளிட்டோரை தவெகவுக்குள் கொண்டு வர முடியாமல் போனதும், இங்கு உற்றுநோக்க வேண்டிய விஷயமாக உள்ளது..
கூட்டணி அரசியல்
அதேபோல இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது.. அதுதான் நம்முடைய தமிழக அரசியல் வரலாறு.... கடந்த காலங்களில் தேமுதிக போன்ற கட்சிகள் ஆரம்பத்தில் பெரும் அலையை உருவாக்கினாலும், சரியான கூட்டணி கணக்குகள் இல்லாதபோது வாக்குச் சிதறலால் வெற்றியை நழுவவிட்டன.. தவெக-வும் அதே போன்றதொரு வாக்குச் சிதறல் என்ற காரணியாக மாறிவிடுமோ? என்ற சந்தேகமும் பரவலாக எழுகிறது..
பொதுவாக தமிழக அரசியலில் கூட்டணி என்பது வெறும் வாக்கு பங்குக்காக மட்டுமே கிடையாது. அது அந்தந்த கட்சியின் எதிர்கால அரசியலையும் தீர்மானிக்கும் மிக முக்கிய கருவியாகும்.,.,, கடந்த கால தமிழக அரசியலை பார்த்தால் முக்கிய கட்சிகள் மெகா கூட்டணிகளில் சேரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை அப்படித்தான் கைப்பற்றி உள்ளன.
தனித்து போட்டி பிளஸ் பாயிண்ட்டா?
ஒருவேளை விஜய் தலைமையிலான கட்சி, கூட்டணி வாய்ப்பை இழந்து தனித்துப் போட்டியிட நேர்ந்தால், பல தொகுதிகளில் வாக்குகள் பகிர்ந்து செல்லும் அபாயம் உள்ளது. இதனால் எதிர்க்கட்சிகளுக்கு பல இடங்களில் முன்னிலை கிடைக்கலாம்.,,, இது சில முக்கிய தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழக்கும் சூழலும் உருவாகலாம்...,
எனவே கூட்டணி வாய்ப்பை தவறவிடுவது விஜய் கட்சிக்கு அரசியல் ரீதியில் ஒரு முக்கியமான "மைனஸ் பாயிண்டாக" கருதப்படுகிறது. அதுமட்டுமல்ல, மக்கள் செல்வாக்கை தாண்டி, தேர்தல் களத்தின் "பூத் மேனேஜ்மென்ட்" மற்றும் கூட்டணி பலம் போன்றவைதான் ஒரு கட்சியின் வெற்றியை தீர்மானிக்கும் என்பதையும் இங்கு நாம் அழுத்தமாக சொல்ல வேண்டி உள்ளது... பொறுத்திருந்து பார்ப்போம்...!!!
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா











Click it and Unblock the Notifications