எப்படியாவது பேசிடனும்.. 3 பக்கமும் நைசாக நெருக்கும் தலைகள்.. ஸ்டாலின் கையில் "சீட்டு".. இன்றே மீட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கட்சியின் ஓராண்டு ஆட்சி நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் இன்று மாலை கலைஞர் அரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

தமிழ்நாடு முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்று இன்றோடு 1 ஆண்டு நிறைவு பெறுகிறது. இதை தமிழ்நாடு முழுக்க திமுகவினர் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்று 1 வருடம் ஓடிவிட்டது.

ஸ்டாலின்

ஸ்டாலின்

இந்த நிலையில், இந்த நாளை கொண்டாடும் வகையில் இன்று மாலை கலைஞர் அரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இன்று மாலை அண்ணா அறிவாலயம் செல்லும் முதல்வர், அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்த விழா பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினை இன்று எம்பிக்கள், அமைச்சர், எம்எல்ஏக்கள், திமுக மூத்த உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் சந்திக்க உள்ளனர். இதற்காக ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டது.

அறிவாலயம்

அறிவாலயம்

இதையடுத்து இன்று மாலையே கூட்டணி கட்சித் தலைவர்களும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளனர். 1 ஆண்டு ஆட்சி முழுமை அடைந்ததை பாராட்டும் வகையில் கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச உள்ளனர். அதன்பின் முதல்வர் ஸ்டாலின் இங்கு நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் ஓராண்டு சாதனை குறித்த விவரங்களை பட்டியலிட்டு பேச இருக்கிறார்.

கூட்டணி கட்சிகள்

கூட்டணி கட்சிகள்

கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் இன்று கலைஞர் அரங்கில் கூட உள்ள நிலையில்தான்.. 1 வருட ஆட்சி மட்டுமின்றி வேறு சில விவகாரங்கள் பற்றியும் முதல்வர் ஸ்டாலினிடம் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை செய்வார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் திமுகவை சேர்ந்த சில முக்கிய மாவட்ட செயலாளர்களும் இன்று முதல்வர் ஸ்டாலினிடம் முக்கிய சில விஷயங்களை பேச முயற்சி செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

Recommended Video

    சமூக நோய்களை குணப்படுத்தும் காரமான திராவிட மாடல் அரசு - MK Stalin
    எம்பிக்கள்

    எம்பிக்கள்

    இந்த முறை திமுக சார்பில் 4 எம்பிக்கள் தேர்வாக முடியும். ஜூன் மாதம் 6 எம்பி பதவி காலியாக உள்ள நிலையில், 2 பேரை அதிமுக தேர்வு செய்ய முடியும். இந்த நிலையில்தான் திமுகவின் 4 எம்பி பதவிகளில் ஒன்று அல்லது இரண்டை வாங்கிவிட கூட்டணி கட்சிகள் தீவிரமாக முயன்று வருகின்றன. முக்கியமாக காங்கிரஸ் கட்சியின் டாப் புள்ளி இருவர் எம்பி தேர்தலில் எப்படியாவது ஒரு சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம்.

    மாவட்ட செயலாளர்கள்

    மாவட்ட செயலாளர்கள்

    இது போக திமுகவின் சில மாவட்ட செயலாளர்கள் எப்படியாவது எம்பி தேர்தலில் வாய்ப்பு கிடைக்குமா.. எப்படியாவது முதல்வர் காதில் பெயரை போட்டுவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்களாம். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ஏற்கனவே ராஜ்ய சபா எம்பிக்களாக இருக்கும் திமுக எம்பிக்கள் மீண்டும் எம்பியாகும் முயற்சிகளை செய்து வருகின்றனர். இப்படி 3 பக்கத்தில் இருந்தும் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கப்படலாம் என்கிறார்கள். ஏற்கனவே தங்க தமிழ் செல்வன், ஏகேஎஸ் விஜயன் ஆகியோர் திமுக தரப்பில் எம்பி ரேஸில் இருக்கிறார்கள்.

    ஸ்டாலின் முடிவு

    ஸ்டாலின் முடிவு

    இதனால் இன்று நடக்கும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இவர்கள் வாழ்த்து சொல்வதோடு நிற்க மாட்டார்கள். நைசாக முதல்வர் ஸ்டாலினிடம் எம்பி தேர்தல் குறித்து பேசுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் யார் என்ன சொன்னாலும் முதல்வர் ஸ்டாலின்தான் சீட்டு எடுப்பார்.. அவர்தான் இறுதி முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது. அதேபோல் விரைவில் தமிழ்நாடு சட்டசபையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. அது தொடர்பாகவும் இன்று நடக்கும் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் ஆலோசனை செய்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+