சல்லி சல்லியாக நொறுங்கிய "பிளான்".. வாக்குகளை பிரித்த கமல், சீமான்.. திமுகவுக்கு பிளஸ்.. அதிமுக ஷாக்
நாம் தமிழர், மநீம தனித்த போட்டியிட்டும் திமுகவுக்கு பாதகம் இல்லை
சென்னை: எது நடக்கும் என்று அதிமுக நினைத்ததோ , அது நடக்கவிலை.. மாறாக, திமுக நினைத்ததுதான் நடந்துள்ளது.. அதாவது கமல், சீமான் இருவரும் திமுகவின் ஓட்டுக்களைதான் பிரிப்பார்கள் என்று எடப்பாடியார் நம்பி கொண்டிருந்த நிலையில், இன்றைய எக்ஸிட் போல் முடிவுகளை பார்த்தால், அவர்கள் இருவரும் அதிமுகவின் ஓட்டுக்களைதான் பிரித்துள்ளார்கள் என்பது தெளிவாகி உள்ளது.. !
தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் எனப்படும் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.,. அதன்படி, பிரதான இடங்களில் திமுகவே வெற்றி வாகை சூடி உள்ளது..
அதிமுகவோ எதிர்பார்த்தபடியே 70 இடங்களை தாண்டவில்லை.. திமுக 170+ இடங்களை பெறும் சூழல் உள்ளது. மற்ற கட்சிகள் குறிப்பிட்டு சொல்லும்படியான இடங்களை பெறவில்லை.

திமுக
அதேசமயம், அதிமுக, திமுகவுக்கு அடுத்து அமமுக 3வது இடத்தை பிடித்து வருகிறது.. மற்றபடி கமல், சீமான், போன்றவர்கள் பெரிதாக சோபிக்கவில்லை.. இத்தனைக்கும் கிராமப்புறங்களில் சீமானுக்கும், கமலுக்கு நகர்ப்புறங்களில் உள்ள இளம் வாக்காளர்கள், மாற்று அணியை எதிர்பார்க்கும் நகர்ப்புறங்களைச் சார்ந்தோரிடம் வாக்குகளை பெறுவார் என்ற தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன.

அமமுக
அதுமட்டுமல்ல, அதிமுகவின் வாக்குகளை அமமுக எப்படி பிரிக்குமோ அதுபோலவே, திமுகவின் வாக்குகளை, இந்த முறை கமலும், சீமானும் பிரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.. இதைதான் அதிமுக தலைமை பலமாக நம்பியது.. 2 நாளைக்கு முன்புகூட தென்மண்டல நிர்வாகிகள் எடப்பாடியாருக்கு போனை போட்டு, தேர்தல் முடிவு குறித்து விவாதித்துள்ளனர்.. அப்போது எடப்பாடியார், "ஏன் கவலைப்படறீங்க, கமலும், சீமானும் இருக்காங்க.. அவங்களோட 2 கட்சியின் வாக்குகள் பிரிந்து, நம்மை வெற்றி பெற வைத்துவிடும் என்று நம்பிக்கை தந்தார்.

கமல், சீமான்
ஆனால், இன்றைய எக்ஸிட் போல் முடிவுகள் அப்படி தெரியவில்லை.. மாறாக, கமலும், சீமானும் அதிமுகவின் ஓட்டுக்களைதான் பிரித்துள்ளனர்.. இதனால் திமுகவின் ஓங்கி உள்ளது என்பது மட்டுமல்ல, அவர்கள் இருவராலும் திமுகவுக்கு எந்த பாதகமும் ஏற்படவில்லை என்பது தெளிவாகி வருகிறது... ஒருவேளை கமல் திமுகவுடன் இணைந்திருந்தால் இது கூடுதல் பலத்தை தந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

திமுக
இந்த விஷயத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும், நடந்த முடிந்த இந்த 5 முனை போட்டியால், எப்படியும் வாக்குகள் பிரியும், அது அதிமுக கூட்டணிக்கும் அதில் உள்ள பாஜகவுக்கும் பெரிய நம்பிக்கையை தரும் என்று டெல்லி மேலிடமும் கணக்கு போட்டது.. அதுவும் புஸ்ஸென்று போய்விட்டது..!
-
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!












Click it and Unblock the Notifications