அண்ணாமலையை காலி செய்ய வேலை செய்கிறேனா.. கொதித்த கரு நாகராஜன்.. என்ன சொன்னார் பாருங்க
சென்னை: மீண்டும் மோடி ஆட்சி அமைய போகிறது. தமிழ்நாட்டிலும் இரட்டை இலக்கத்தில் பாஜக வெற்றி பெறும் என்று கூறிய கரு நாகராஜன், அண்ணாமலையை காலி நான் வேலை செய்கிறேனா என்ற கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.
ஒன்இந்தியா தமிழுக்கு கரு நாகராஜன் இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் பாஜகவுக்கு இரட்டை இலக்கத்தில் வெற்றி கிடைக்கும். இதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பாஜகவுக்குள் ஒற்றுமை நிலவுகிறது. ஒருசிலர் வதந்தி பரப்புகிறார்கள். தென் சென்னை தொகுதியில் நான் தேர்தல் பொறுப்பாளர். தேர்தலுக்கு முன்னாடியே நான் வேலை பார்க்கிறேன். யார் வேட்பாளராக வருவார்கள் என்றே தெரியாமல் தான் இருந்தது.

தமிழிசை சவுந்தரராஜன் வேட்பாளராக வருவார் என்று நினைக்கவில்லை. அவர் கவர்னர் பதவியை ராஜினாமா செய்வார் என்றும் நான் நினைக்கவில்லை. வேளச்சேரி சென்னை சில்கஸ் எதிரில் உள்ள ஆபிசில் தான் 2 மாதமாக வேலை பார்த்தோம். வேட்பாளர்கள் அறிவிப்பு பிற்கு தேர்தல் பணிக்கான குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் முதல் கூட்டத்தில், நான் பேசும்போது எல்லா வேலையையும் நான் பார்த்துக்கிறேன்..
ஆனால் காசு கொடுக்கல் வாங்கல்.. பூத் கமிட்டிக்கு கொடுங்க.. இவங்களுக்கு கொடுங்க.. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு கொடுங்க.. வேட்பாளர் செலவு என்று இருக்கிறதுல்லா.. 95 லட்சம் ரூபாய் செலவழிக்கலாம். ஆனா இந்த வேலையை மட்டும் எனக்கு கொடுக்காதீங்க.. நான் பிரசாரம் செய்கிறேன். மற்ற வேலைகளை எல்லாம் நான் செய்றேன்.இந்த காசு கொடுக்கல் வாங்கல் மட்டும் வேண்டாம் என்று முதல் கண்டிஷன் போட்டேன்.
ஆனால் ஒரு பத்திரிகையில் எனக்கு 2 கோடி தந்ததாக கூறுகின்றனர். சுத்த அப்பட்டாமான பொய்.. அது எப்படி எழுத முடியும். தனிப்பட்ட முறையில் எனக்கு கொடுத்தால் தானே எழுத முடியும். இந்த குற்றச்சாட்டு என் மரியாதையை கெடுக்க நினைக்கும் செயல். என் மரியாதை என்னவென்றால், பணக்காரன், அந்தஸ்தில் உள்ளவன் என்றில்லை. எல்லாரிடமும் பழகுவான், 24/7 எல்லாரிடமும் தொடர்புகொள்ளக் கூடிய பழக்கம் இருக்கு.
இதனை கெடுப்பதற்கு சிலர் இப்படி செய்கிறார்கள். இப்படிப்பட்ட பிழைப்பு அவர்களுக்கு எதற்கு?.. இந்த மாதிரியான பொய்யான பிரசாரங்களை எல்லாம் கண்டு எங்க தலைவர்கள் அஞ்சுவதில்லை. அவர்களுக்கு எல்லாமே தெரியும். தலைவருக்கும் தெரியும், தமிழிசைக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, அண்ணாமலையை காலி செய்வதற்கு கரு நாகராஜன் உழைப்பதாக பரவும் செய்திக்கு, கரு நாகராஜன் பதில் கூறியதாவது:- இதைவிட காமெடி என்னங்க வேணும். 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய காமெடி இது தான். அண்ணாமலையை காலி செய்வதற்கு கரு நாகராஜன், அடுத்து நாராயண் திருப்பதி, அடுத்து அமர்பிரசாத் ரெட்டி இவங்க எல்லாரும் வேலை செய்கிறார்கள் என்று ஒரு வார இதழில் செய்தி போடுகிறார்கள்.
ஒரு முட்டாள் வந்து பத்திரிகையில் பேட்டி கொடுக்கிறார்கள். அதை ஒருவர் செய்தியாகவும் போடுகிறார்கள். மீண்டும் மோடி ஆட்சி அமைய போகிறது. பாஜக நன்றாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் இரட்டை இலக்கத்தில் பாஜக வெற்றி பெறும். இவ்வாறு கரு நாகராஜன் கூறினார்.
-
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து.. 2வது தேசிய கீதத்துடன் தொடங்கியது தமிழக சட்டமன்ற கூட்டம்! -
முதலில் சங்கர் ஜிவால்.. இப்போது சுனில் குமார்.. தமிழக மாஜி டிஜிபிக்கள் அடுத்தடுத்து விலகல்! பின்னணி -
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
நயினார் தலைக்கு மேல் தொங்குது கத்தி.. ’கணக்கு’ கேட்கும் டெல்லி! கோபத்தில் கண்சிவந்த அமித் ஷா! பரபர -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம்












Click it and Unblock the Notifications