அமரன் படத்துக்கு மிரட்டல்.. தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கொடுங்க! எஸ்டிபிஐக்கு எதிராக களமிறங்கிய பாஜக
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் படத்தில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக எஸ்டிபிஐ உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்த நிலையில் அமரன் படம் வெளியாகி உள்ள தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.
ரங்கூன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளை இயக்கிய அவர் ரங்கூன் படத்தில் தான் முதன் முதலாக தமிழில் இயக்குனராக அறிமுகமானார்.

தொடர்ந்து 'இந்தியாஸ் மோஸ்ட் பியர்லெஸ் : ட்ரூ ஸ்டோரிஸ் ஆஃப் மாடர்ன் மிலிட்டரி' என்ற புத்தகத்தில் இடம் பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அமரன் படத்தை உருவாக்கி இருக்கிறார்.
கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ள இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியானது. கல்லூரி காலம் முதல் ராணுவத்தில் இணைந்து வீர மரணம் அடைந்தது வரையிலான மேஜர் முகுந்த் வரதராஜனின் கதை இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இளம் வயது இளைஞராகவும், ராணுவ மேஜராகவும் தனது தேர்ந்த நடிப்பை சிவகார்த்திகேயன் வழங்கியிருந்தார்.
மேலும் இந்துவின் அற்புதமான கேரக்டரை சாய்பல்லவி தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார். தற்போது இந்த படம் பெரு வெற்றி பெற்றிருக்கும் நிலையில் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இந்த நிலையில் படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு பிறகு படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. படத்தில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறி இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகம் முற்றுகையிடப்பட்டதோடு போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அமரன் படம் வெளியாகி இருக்கும் தியேட்டர்கள் முற்றுகையிடப்படும் என எஸ்டிபிஐ கட்சி அறிவித்தது. இதை அடுத்து அந்த படம் வெளியாகி உள்ள தியேட்டர்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சி வெறுப்பு அரசியல் செய்வதாகவும், அமரன் திரைப்படம் வெளியாகி உள்ள தியேட்டர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,""அமரன்" படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்! படக்குழுவினரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்! சமீபத்தில் காஷ்மீரில் பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி உயிர்நீத்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய இராணுவ வீரர் திரு. மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் "அமரன்" என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.
இப்படம் முழுக்க முழுக்க தேசப்பற்றையும் இராணுவ வீரர்களின் தியாகத்தை பறைசாற்றும் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுக் கதை என்பது படம் பார்த்த அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆகையால் தான் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் உட்பட உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து தரப்பு மக்களும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
ஆனால், இப்படத்தில் இஸ்லாமிய மக்களை தவறாக சித்தரித்துள்ளதாக அவதூறுகளைப் பரப்பி, இப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தினை அறிவித்துள்ள SDPI-யின் வெறுப்பரசியலை வன்மையாகக் கண்டிக்கிறோம். மிக அமைதியாகவும், கட்டுப்பாடோடும், தேசப்பற்றை பறைசாற்றும் விதமாக நடக்கும் RSS அமைப்பின் பேரணியை ஆயிரம் கேள்விகளால் துளைத்தெடுத்து, அனுமதி கொடுக்க மறுத்த திமுக அரசு, பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இங்கிருக்கும் அமைப்புகள் "அமரன்" திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் செய்வதை வேடிக்கை பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது.
மேலும், இப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள் மற்றும் இப்படத்தில் பணியாற்றியவர்களை அச்சுறுத்தும் வகையில் சில அமைப்புகள் பேசி வரும் நிலையில், அக்கலைஞர்களின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசை தமிழக பாஜக சார்பில் கேட்டுக் கொள்கிறோம்." என கூறப்பட்டுள்ளது.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications