Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைமுடி வளரணுமா? தேங்காய் இருக்கா? அப்ப இதை ட்ரை பண்ணுங்க. வறண்ட கூந்தலை விரட்டும் சூப்பர் டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைமுடி வளர்ச்சி வேணுமா? வறண்ட தலைமுடி இருக்கிறதா? இதற்கு வீட்டிலேயே எளிய தீர்வை தேடிக் கொள்ளலாம்.. இதோ இந்த குட்டி குட்டி டிப்ஸை பாருங்கள்.

தலையில் எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாடு குறைவு காரணமாகவே, நம்முடைய தலைமுடி வறட்சியடைகிறது... மேலும், அதிகமாக சூரிய கதிர்வீச்சு தாக்கமும் ஒரு காரணமாகிறது. அதேபோல, கடின தன்மையுள்ள ஷாம்புகளை பயன்படுத்துவதும், தலைமுடி வறட்சிக்கு காரணமாகிறது.

Amazing Health Tips for Dry Hair and Do you know the Coconut Milk is the Super Medicine for Hair Growth

இதற்கு, ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி தலையில் தடவி சிறிது நேரம் ஊறவிட்டு, மிதமான தன்மையுடைய ஷாம்புகளை பயன்படுத்தி குளித்து வந்தால், கூந்தலின் வறட்சி தன்மை குறையும்.

கறிவேப்பிலை: ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை, நல்லெண்ணையில் 3 நாட்களுக்கு ஊறவைக்க வேண்டும். பிறகு அந்த இலையை வடிகட்டிவிட்டு, அந்த எண்ணெய்யை மட்டும் தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடி வளர்ச்சி பெறுவதுடன், வறண்ட தன்மையும் நீங்கும்.
அதேபோல, வறண்ட கூந்தல் உடையவர்கள், ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய்யை மிதமாக சூடுபடுத்தி தலையில் தடவி சிறிது நேரம் ஊறவிட்டு தலைக்கு குளித்தாலும் பலன்கிடைக்கும். விளக்கெண்ணெய், கிளிசரின், வினிகர் ஆகியவற்றை சமஅளவு எடுத்து மிதமான ஷாம்புவுடன் சேர்த்து கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்து வந்தாலும் பலன் கிடைக்கும்.

தேங்காய்ப்பால்: அல்லது தலைக்கு குளித்த பிறகு சிறிது பாலை தலையில் தேய்த்து அலசினால் வறட்சி நீங்கி, தலைமுடியில் மென்மையும் கிடைக்கும். அல்லது தேங்காய்ப்பாலை மட்டும் தலைக்கு தேய்த்து ஊறவைத்து குளிக்கலாம்.

ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் + ஒரு டீஸ்பூன் எலுமிச்சம் சாறு + ஒரு ஸ்பூன் தயிர், முட்டையின் வெள்ளைக்கரு இதையெல்லாம் ஒன்றாக சேர்த்து தலைக்கு தடவி குளித்து வந்தால், தலைமுடி உறுதியாகும்.. முடி உதிர்வதும் நிற்கும்.

வாழைப்பழம்: அல்லது ஒரு வாழைப்பழத்துடன் ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு, ஒரு ஸ்பூன் ஹென்னா பவுடர், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை கலந்து தலைக்கு தேய்த்து வந்தாலும் தலைமுடி வலுவாகும். ஒரு டம்ளர் பாலில், ஒரு முட்டையை நன்றாக அடித்து கலக்கி தலையில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து குளித்து வந்தாலும் தலைமுடி மென்மையாகும்..

முக்கியமாக தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.. உணவில் புரோட்டீன் நிறைந்த சோயா, பனீர், உலர் பழங்கள், கடலை, பருப்பு வகைகள் நிறைய சேர்த்து கொள்ள வேண்டும. சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தாலும், தலைமுடி வளர்ச்சியில் பலன் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+