தாம்பரம் அடிச்சு தூக்குது.. புறநகர் பகுதியின் 15 ஊராட்சிகள் இணைப்பு? மாநகராட்சியின் சூப்பர் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம்பரம் மாநகராட்சி புத்தம் புதிய பொலிவுடன் தயாராகி கொண்டிருக்கிறது.. அதன்படி, தாம்பரம் மாநகராட்சியின் விரிவாக்கமும் விரைவில் நடக்கும் என்று தெரிகிறது.. இது தொடர்பான செய்தி ஒன்று வெளியாகி தாம்பரம் மக்களுக்கு கூடுதல் உற்சாகத்தை தந்து வருகிறது.

கடந்த 2021ம் ஆண்டு முதல் தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம் நகராட்சிகள், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகள் இணைக்கப்பட்டு, இந்த மாநகராட்சி உருவெடுத்தது.

Tambaram Chennai 15 panchayats 15

அனைத்து வசதிகள்: சுமார் 87.64 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தாம்பரம் மாநகராட்சியில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.. இங்கு மொத்தம் 70 வார்டுகள் இருக்கின்றன.. இவை 5 மண்டலங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. சாலை வசதிகளை போலவே, குடிநீர் வசதியிலும் பெருத்த கவனத்தை தாம்பரம் மாநகராட்சி செலுத்தி வருகிறது.. அதேபோல, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், கூடுதலாக மெட்ரோ குடிநீர் கிடைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு நடுவில், தாம்பரத்திலுள்ள 5 மண்டலங்களில் 70 வார்டுகளிலும், பெயர் பலகைகளை மாற்றியமைக்க, 5.56 கோடி ரூபாய்க்கு டெண்டர்' விடப்பட்டு, 2,500 புதிய பெயர் பலகைகள் பொருத்தும் பணியும் கையில் எடுக்கப்பட்டது.

தாம்பரம் மாநகராட்சி: இப்படிப்பட்ட சூழலில், தாம்பரம் மாநகராட்சியில் இன்னொரு அதிரடி விரைவில் வரப்போகிறது.. அதாவது, புறநகர் பகுதிகளான வேங்கைவாசல், நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், மதுரபாக்கம், அகரம்தென், திருவஞ்சேரி, முடிச்சூர், கவுல்பஜார், மூவரசம்பட்டு, பொழிச்சலூர், திரிசூலம் ஆகிய 15 ஊராட்சிகளை, தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் ஒருங்கிணைந்த குடிநீர், மழைநீர் கால்வாய், பாதாள சாக்கடை திட்டங்களை செயல்படுத்தபட திட்டமிட்டு அதிகாரிகள், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.. இந்த திட்டங்களுக்கான அறிக்கையும் தயார் செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஊராட்சிகள்: ஆனால் அரசு தரப்பில், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.. விரைவில் இந்த அறிவிப்பு வரும்பட்சத்தில், மேற்கண்ட ஊராட்சிகள் அனைத்தும் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும்.

எனவே அடுத்தக்கட்ட நடவடிக்கையில் அதிகாரிகள் களமிறங்கியிருக்கிறார்கள்.. நேற்றைய தினமும், தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் மேற்கண்ட 15 ஊராட்சிகளின் தலைவர்கள், செயலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது...

நம்பிக்கை: இந்த கூட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் உள்ள மக்கள் தொகை, குடியிருப்பு வீடுகள், வருமானம், நிரந்தர ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள், குப்பை சேகரிப்பு வாகனங்கள், மின்விளக்குகள், சாலைகள் போன்ற விவரங்களை அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.. இதை வைத்து, தாம்பரம் மாநகராட்சியின் அடுத்த கட்ட திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் இருக்கும் என்கிறார்கள் அதிகாரிகள்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+