இதுதான் நம்ம தமிழ்.. அட்சரசுத்தி பிசகாமல் பாட்டு பாடி அசத்திய ஆப்பிரிக்க பெண்..சொக்கி விழுந்த இணையம்
சென்னை: ஆப்பிரிக்க பெண்ணின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதை பார்த்த இணைவாசிகள் திரண்டு வந்து அந்த பெண்ணுக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.. குறிப்பாக தமிழர்கள், மெய்மறந்து நன்றியையும் அப்பெண்ணுக்கு நெகிழ்ந்து சொல்லி வருகிறார்கள்.
தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாக விளங்குகிறது.. அதனால்தான், உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் தமிழ் மொழியை தேடி விரும்பி பேசி வருகிறார்கள்..

இதில் தென்னாப்பிரிக்காவை பொறுத்தவரை, அங்கு தமிழர்களின் எண்ணிக்கை 2, 50,000க்கும் மேலாகும்.. 1860ம் ஆண்டு முதல் இந்தியாவிலிருந்து தமிழர்கள் பலர் தென் ஆப்பிரிக்காவின் நடால் நகருக்கு குடியேறினார்கள்.. இதில், 18ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கேப்டவுன் அடிமைகளில் பாதி பேர் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்..
அடையாளம்: இங்கு 150 வருடங்களாக தமிழர்கள் வாழ்ந்து வருவதால், மதம் மற்றும் அதன் பல திருவிழாக்களில் பங்கேற்பது பக்தர்களுக்கு மதிப்புமிக்க அடையாளத்தையும், ஒற்றுமையையும் கொண்டு வந்திருக்கிறது..
தென் ஆப்பிரிக்காவில் தமிழ் சமூகம் தங்கள் மதத்தை இந்து என்று சொல்லாமல் "தமிழ்" என்றே சொல்கிறார்களாம்.. அங்குள்ளவர்கள் ஆடி மாதத்தில் மாதத்தில் மாரியம்மன் திருவிழாவை கொண்டாடுகிறார்கள்.. தைப்பூசம் திருவிழாவையும் அம்மக்கள் சிறப்பிக்கிறார்கள். தமிழ் பாடசாலைகளும் நவீன முறையில் நிறுவப்பட்டன.. அந்தவகையில், தென் ஆப்பிரிக்காவில் கலை, இலக்கியமும் பீறிட்டு காணப்படுகிறது.. தற்போது இணையதளம் உருவான பிறகு, ஆப்பிரிக்க மக்களின் தமிழ் மொழிகளை பலமுறை கேட்க நேரிடுகிறது.
இளம்பெண்: தமிழ் பாடல்களுக்கு டான்ஸ் ஆடியும், பாட்டுக்களை பாடியும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.. இந்நிலையில், ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னுடைய இனிமையான குரலால் தமிழ் பாடல்களை பாடி கலக்கி கொண்டிருக்கிறார்.. இந்த பெண்ணின் வீடியோக்கள் ஒவ்வொன்றும் நெட்டிசன்களை ஈர்த்து வருகின்றன..

இப்போதுகூட, தனுஷ் நடித்த "வாத்தி" படத்தில் இடம்பெற்ற 'அடியாத்தி' பாடலையும், சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பெற்ற "அனல் மேலே பனித்துளி" பாடலையும் பாடி அசத்தியிருக்கிறார். இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள நபர், "நமது தாய் மொழியை பிறர் உச்சரிக்கக் கேட்கும் போது பிறக்கும் உவகை, சொல்லால் விளக்க முடியாத உணர்வு. பிறமொழியைத் தாய் மொழியாகக் கொண்டோரையும் நம் தமிழ் மொழியை உச்சரிக்கத் தூண்டும் திரை இசைக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
தாய்மொழி: இந்த பெண்ணின் பாடலை கேட்ட பலரும் ஆச்சரியப்பட்டு போகிறார்கள்.. இவருக்கு தமிழ் மொழி தெரியாதாம்.. தாய்மொழி வேறாக இருந்தாலும், தமிழ் பாடலை அடிக்கடி கேட்டு கேட்டு, அதுபோலவே பாட பழகி கொண்டதாக கூறுகிறார். மொழி தெரியாமலேயே அதன் உணர்வுகளை வைத்து, பாடலின் வகைகளை புரிந்து கொள்வதாகவும் இந்த பெண் அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications