Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

HR இனி வேண்டாம்.. 15% பேரை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பும் அமேசான்.. AI வைத்த ஆப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்போது ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கான அறிவிப்பை எச்ஆர் பணியில் உள்ளவர்கள் போன்கால், மீட்டிங் அல்லது இ-மெயிலில் தெரிவித்து ஊழியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கின்றனர். இப்படியான சூழலில் தான் எச்ஆர்-களுக்கே அமேசான் நிறுவனம் ஷாக் கொடுத்துள்ளது. அமேசான் எச்ஆர் பிரிவில் பணியாற்றும் 15 சதவீத எச்ஆர்-களை பணி நீக்கம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஏஐ தான். அதுபற்றி இங்கே பார்க்கலாம்.

அமேசான்.. கால்வைக்காத துறையே கிடையாது என்று கூறலாம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் வர்த்தகம், கிளவுட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரிம்மிங், ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சர்வீஸ்களை வழங்கி வருகிறது இந்த அமேசான் நிறுவனம்.

amazon-is-preparing-to-cut-up-to-15-per-cent-of-staff-in-its-hr-division
Photo Credit:

இந்நிலையில் தான் தற்போது பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். நிறுவனத்தில் உள்ள எச்ஆர் ஊழியர்களுக்கு போன் அல்லது மெயிலில் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை தெரிவித்து வருகின்றனர். இப்படியான சூழலில் தான் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் தகவலை கூறும் எச்ஆர்-களுக்கே பெரிய ஆப்பு வைத்துள்ளது அமேசான் நிறுவனம்.

அதாவது அமேசான் நிறுவனம் ஏஐ தொடர்பான டெக்னாலஜியை பயன்படுத்த தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆட்குறைப்பு நடவடிக்கையையும் தொடங்கி உள்ளது. அதன்படி அமேசான் நிறுவனம் தனது எச்ஆர் பிரிவில் பணியாற்றுவோரில் 15 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி பிற பிரிவுகளில் பணியாற்றுவோரையும் பணி நீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ஃபார்ச்சூன் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‛‛அமேசான் நிறுவனம் தனது எச்ஆர் பிரிவில் 15 சதவீதம் பேரை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளது. அதேபோல் பிற பிரிவுகளில் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஆலோசித்து வருகிறது. மொத்தம் எவ்வளவு பேர் வேலையை இழப்பார்கள் என்பது எண்ணிக்கை அடிப்படையில் இன்னும் தெரியவில்லை.

இந்த பணி நீக்க நடவடிக்கைக்கு முக்கிய காரணம் ஆட்டோமேஷன் மற்றும் பணி திறன் உள்ளிட்டவை அளவீடாக வைக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தில் ஏஐ பயன்பாட்டை அதிகரிப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அமேசான் தனது ஏஐ மற்றும் கிளவுட் பயன்பாட்டில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்து வருகிறது. இது பணி நீக்க நடவடிக்கைக்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டிலேயே அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸி, வருங்காலம் ஏஐ-யால் வரையறுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
மேலும் கடந்த சில மாதங்களில், ‛‛ஊழியர்கள் ஏஐ-யை பயன்படுத்த வேண்டும். நிறுவனத்தில் ஏஐ பயன்பாடு அதிகரிக்கப்பட உள்ளது. ஏஐ-யை நன்கு அறிந்தவர்கள், ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கும் திறமையை ஊழியர்கள் வளர்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நிறுவனம் முழுவதும் AI பயன்பாட்டை அதிகரிப்பது என்பது பணியாளர்களைக் குறைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்'' என்று கூறியிருந்தார்.

இந்த ஆண்டு அமேசான் நிறுவனம் 100 பில்லியனுக்கும் அதிகமான டாலர்களை இந்த திட்டத்தில் செலவிட திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஏஐ மூலமாக சேவைகளை வழங்குவது உள்ளிட்ட கட்டமைப்புகளை உருவாக்கும் வகையில் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனத்தில் இப்படியான பணி நீக்கங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் நடந்துள்ளது. சமீபத்தில் கூட அமேசான் நிறுவனத்தின் வொண்டரி பாட்காஸ்ட் பிரிவு மற்றும் ஏடபிள்யூஎஸ் பிரிவில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இப்போது எச்ஆர் பிரிவில் பணி நீக்க நடவடிக்கையை அமேசான் முன்னெடுத்துள்ளது.

அதுமட்டுமின்றி தற்போது அமேசான் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் ஆண்டி ஜாஸி தொடர்ந்து டெக்னாலஜியை பயன்படுத்தி ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை மொத்தம் 27 ஆயிரம் பணியாளர்களை அவர் நீக்கியிருந்தார். இதனால் அமேசானில் எச்ஆர் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+