சென்னை அம்பத்தூரில்.. 18 வயதில் விண்ணுலகம் போகும் ஹேம்நாத்.. மண்ணுலகிலும் வாழ போகிறார்
சென்னை: சென்னை மற்றும் சென்னையின் புறநகரில் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும்.. ஏனெனில் கார் மற்றும் கனரகவாகனங்கள்,பேருந்துகள் மின்னல் வேகத்தில் வருகின்றன. குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்னைக்குள் வர வேண்டும் என்று சில நேரங்களில் வாகன ஓட்டிகள் கவனத்தை தவற விடுகிறார்கள். அது பலருக்கு எமனாக மாறி வருகிறது. அப்படித்தான் அம்பத்தூரில் 23 வயது மாணவருக்கு நடந்தது. மகனை பறிகொடுத்த பெற்றோர், அவனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.
சென்னையில் வாகனத்தில் செல்வோர் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். மற்ற ஊர்களைவிட இங்கு ஆபத்து அதிகம்.. சிக்னல் போட்டுவிட்டார்களே என்று எதையும் பார்க்காமல் கடந்த போக வேண்டாம். ஏனெனில் சிக்னலை மதிக்காமல் அத்துமீறி செல்வதை இங்கு பல வாகன ஓட்டிகள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.அதாவது சிக்னல் விழுந்தாலும் ஒருஐந்து வினாடிகள் மின்னல் வேகத்தில் கடந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

சிக்னல்கள்
எனவே சிக்னல் விழுந்துவிட்டதே என்று எந்த காரணம் கொண்டும் கடக்க வேண்டாம்.. அவர்கள் நிற்கிறார்களா என்பதை உறுதி செய்த பின்னர் கடந்து செல்லுங்கள். ஏனெனில் சற்றும் மற்றவர்களை பற்றி யோசிக்காமல், சுயநலத்துடன் வாகன ஓட்டிகள் பலர் வேகமாக சிக்னல்களை கடக்க எமனாகவே மாறிவிடுகிறார்கள்.. அதேபோல் சில சரக்கு வாகன ஓட்டிகளும் முன்னாள் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை மதிக்கமால் ஏறி செல்கிறார்கள். இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது அதிகமாக உள்ளது. சென்னை அம்பத்தூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
பட்டரைவாக்கம் ரயில் நிலையம்
சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் ரகுமூர்த்தி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தார்கள். அதில் மூத்த மகன் சந்தோஷ், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 2-வது மகன் ஹேம்நாத்துக்கு 18 வயது ஆகிறது. இவர் நெற்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். கடந்த ஜூலை 21-ந் தேதி மதியம் ஹேம்நாத், இருசக்கர வாகனத்தில் தனது நண்பனை அம்பத்தூரை அடுத்து உள்ள பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
விபத்து
அப்போது கள்ளிக்குப்பம் சர்வீஸ் சாலையில் வந்தபோது சரக்கு வாகனம் ஒன்று இவர் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் தலையில் படுகாயம் அடைந்தார் ஹேம்நாத். இதையடுத்து உடனே சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவனையில் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அனுமதித்தனர்.
ஹேம்நாத்தின் இதயம்
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஹேம்நாத் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வாகனத்தின் டிரைவரான குடியாத்தம் பகுதியை சேர்ந்த கவின்(23) என்பவரை கைது செய்தனர். தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்தனர். இதையடுத்து ஹேம்நாத்தின் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக பெறப்பட்டன.
கண்கள் தானம்
விபத்தில் படுகாயம் அடைந்து அவரது கண்கள் செயல் இழந்துவிட்டதால் கண்களை தானம் செய்ய முடியவில்லை என என்று பெற்றோர் தெரிவித்தனர். பொதுவாகவே உடல் உறுப்பு தானம் செய்வதில் தமிழ்நாட்டில் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். கிராமங்களில் கூட உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு இப்போது அதிகரித்து வருகிறது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications