Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்வதேச கருத்தரங்குகளில் மதுபானம் பரிமாற அனுமதி.. வரும் கூட்டத்தொடரில் தாக்கல்.. அரசு முக்கிய தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமண மண்டபங்கள், சர்வதேச கருத்தரங்குகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் அரசின் சட்டத் திருத்தம் வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் எதிர்வரும் கூட்டத்தொடரின் போது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Amendment to to serve liquor in international seminars will tabled in upcoming assembly session

திருமண மண்டபங்கள், விருந்து மண்டபங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற வசதியாக தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் திருத்தம் செய்து, தமிழ்நாடு அரசு சிறப்பு உரிமத்தை அறிமுகப்படுத்தியது.

பின்னர், பொது இடங்களான திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் மதுபானம் பரிமாற வகை செய்யும் விதிகள் ரத்து செய்யப்பட்டு, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறும் வகையில் உரிமம் வழங்குவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் வழங்க வகை செய்யும் வகையில் விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டதா எனத் தெரிவிக்கும்படி தமிழக அரசு தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இந்த திருத்த விதிகள் கடந்த கூட்டத்தொடரின் போது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை எனவும், எதிர்வரும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என மதுவிலக்கு மற்றும் கலால் துறை ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்து, அதுவரை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரினார்.

மனுதாரர் தரப்பிலும் வழக்கை தள்ளிவைக்க கோரியுள்ளதாக கூறிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அக்டோபர் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும், திருத்த விதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+