அப்பாடா.. "எலிக்கு" ஓகே ஆயிடுச்சாம்.. தொற்றுக்கு புது ட்ரீட்மென்ட்.. நல்ல சேதி சொன்ன விஞ்ஞானிகள்
தொற்றுக்கு சிகிச்சை முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
சென்னை: அப்பாடா.. மேலும் ஒரு நல்ல தகவல் கிடைத்துள்ளது.. கொரோனா தொற்றுக்கான சிகிச்சை முறை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்களாம்.
உலகை மிரட்டி கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராக பல தடுப்பூசிகள் வெற்றிகரமாக கண்டறியப்பட்டு உள்ளன...
ஆனால், சிகிச்சை முறைகள் எதுவும் இல்லை.. மருந்துகளும் இல்லை.. இந்த ஆராய்ச்சியில் அறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சிகிச்சை
அந்த வகையில், இந்த கொரோனா தொற்றுக்கான சிகிச்சை முறைகளும் நடந்து வருகின்றன.. அதில் ஒன்றாக அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு சிகிச்சையை செய்துள்ளனர்..அதன்படி, தொற்றுக்கு எதிராக புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் (ஜிசி376) மூலம் சிகிச்சை தந்தால், நல்ல முன்னேற்றம் ஏற்படுவதாக சொல்கிறார்கள்.. இந்த ஆய்வு முடிவுகளை ஒரு மருத்துவ பத்திரிகையிலும் வெளியிட்டுள்ளன.

நுரையீரல்
அதாவது, கொரோனா பாதித்த எலிகள் மற்றும் விலங்குகளுக்கு இந்த புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் கொண்டு சிகிச்சை தந்திருக்கிறார்கள்.. அப்படி தரும்போது, அவைகளின் இறப்புகள் குறைந்துவிட்டதாம்.. அதுமட்டுமல்ல, நுரையீரல் தொற்றுயும் குறைந்து வருவது கண்டறியப்பட்டு உள்ளது.

வைரஸ்
இந்த புரோட்டீஸ் தடுப்பான்களால், வைரஸ்களின் இனப்பெருக்கம் தடுப்பதுடன், வைரஸ் உற்பத்திக்கு தேவையான புரதங்களை செயல்படுத்துவதையும் தடுக்கப்படுகிறது.. இதை பற்றி கன்சாஸ் கன்சாஸ் பல்கலைக்கழக இணை பேராசிரியர் ஒருவர் சொல்லும்போது, "தொற்று பாதித்த பூனைகளுக்கு சிகிச்சைக்காகதான், நாங்கள் இந்த புரோட்டீஸ் தடுப்பான்களை ஜிசி376 உருவாக்கினோம்... தற்போது அது விலங்குகளுக்கான மருந்தாக வர்த்தக ரீதியான தயாரிப்பில் உள்ளது" என்றார்.

தொற்று
தொற்று பாதித்த எலிக்கு 24 மணி நேரத்துக்கு பிறகு இந்த சிகிச்சையை மேற்கொண்டார்களாம்.. சிகிச்சை பெறாத எலிகளை விட சிகிச்சை பெற்ற எலிகளிடம் இறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது என்கிறார்கள்.. எனவே, எலிகளிடம் இந்த சிகிச்சை முறை வெற்றி பெற்றிருப்பதன் மூலம், இது கொரோனா சிகிச்சை முறையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications