Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு இடமே இல்லை”.. பிரதமர் மோடி பேச்சுக்கு பிறகும் விடாப்பிடியாக அதிமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டணி ஆட்சி பற்றி இதுவரை பேசாத நிலையில், பாஜகவோ, கூட்டணி ஆட்சி என்று மட்டுமே பேசி வருகிறது. அண்மையில் மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடியும் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமையும் என்றே பேசினார். இந்தச் சூழலில், இன்று பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது எனக் கூறியுள்ளார்.

மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளை முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டையில் அதிமுக சார்பில் இன்று அமைதி பேரணி நடைபெற்றது. வடசென்னை அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பங்கேற்ற அமைதி பேரணி நடைபெற்றது. தண்டையார்பேட்டையில் இருந்து பேரணியாகச் சென்று தண்டையார்பேட்டை திலகர் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினர். சுனாமி குடியிருப்பு மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

AIADMK BJP PM Modi

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், "திமுக ஆட்சியை அகற்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இரண்டு உடன் பிறந்த சகோதரர்கள் ஒன்றிணைந்துள்ளன. தேமுதிக, ஓபிஎஸ் அதிமுக கூட்டணிக்கு வருவது குறித்து பொறுத்திருந்து பாருங்கள். அரசியலில் சூழல்கள் மாறும், எங்கு சென்றாலும் பாசங்கள் மீண்டும் ஒன்றிணையம். எடப்பாடி தலைமையில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இரட்டை இலை வெற்றி பெறும். டிடிவி தினகரன் எடப்பாடிக்காக பிரச்சாரம் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

எடப்பாடியார் தனித்த வெற்றிக்கு பாடுபட டிடிவி தினகரன் சூளுரைத்திருக்கிறார். கண்டிப்பாக பிரச்சாரம் செய்வார். நாங்கள் வெற்றி பெறுவோம். கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை, இரட்டை இலை சின்னம் தனியாக எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது என்று நாங்கள் தெளிவாக சொல்லி இருக்கிறோம். இரட்டை இலை சின்னத்தில் தனியாக எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைப்போம்" என்று தெரிவித்தார்.

அண்மையில் பியூஷ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பியூஷ் கோயல் பேசுகையில், "தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகன் கூட்டணி ஆட்சிக்கு வரும். ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை முழுமையாக வீழ்த்தி அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வரும். என்டிஏ கூட்டணி நிச்சயமாக தமிழ்நாட்டிற்கு எதிர்காலத்திற்கான சிறந்த வளர்ச்சியை கொண்டு வரும்" என்றார்.

அண்மையில் மதுராந்தகத்தில் நடைபெற்ற என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ன்.டி.ஏ கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்றார். ஒருமுறை கூட 'அதிமுக' என்ற பெயரையே உச்சரிக்கவில்லை. மோடி தனது பேச்சில் பாஜக , திமுக , காங்கிரஸ் என்ற கட்சிகளை குறிப்பிட்டாரே தவிர, அதிமுக என்ற பெயரை கூட குறிப்பிடவில்லை. அதேசமயம், அதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி பேசும்போது, அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றார்.

அதிமுக கூட்டணி ஆட்சி பற்றி இதுவரை பேசாத நிலையில், பாஜகவோ, கூட்டணி ஆட்சி என்று மட்டுமே பேசி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியும் அவ்வாறே பேசினார். இந்தச் சூழலில், இன்று பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது என்று நாங்கள் தெளிவாக சொல்லி இருக்கிறோம் எனக் கூறியுள்ளது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+