கைதாகியும் அமைச்சராக நீடிக்கும் செந்தில் பாலாஜி! ஆளுநரின் அதிகாரம் என்ன? டெல்லியில் நடந்தது இதுதான்!
சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் ஆளுநர் ஆர்என் ரவியின் எதிர்ப்பை மீறி முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைத்துள்ளார். இது தமிழக அரசு மற்றும் ஆளுநர் ஆர்என் ரவிக்கும் இடையே மோதல் போக்கை உருவாக்கி உள்ள நிலையில் இந்த விஷயத்தில் ஆளுநரின் அதிகாரம் என்ன?, டெல்லியில் நடந்து என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் வசூலித்து மோசடி செய்த வழக்கை எதிர்கொண்டார்.

இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரை விசாரித்த அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை அதிரடியாக கைது செய்தது. நெஞ்சுவலியால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்கிடைய தான் செந்தில் பாலாஜியை நேற்று முதல் 23ம் தேதி வரை 8 நாட்கள் அமலாக்கத்துறை காவலுக்கு வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தற்போது செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளார். முன்னதாகசெந்தில் பாலாஜி கைதானதால் அவரது துறைகளை மாற்றி அமைக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தார்.
இதையடுத்து செந்தில் பாலாஜி நிர்வகித்த மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்என் ரவிக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரைகளை நேற்று ஆளுநர் ஆர்என் ரவி ஏற்றுக்கொண்டார். மாறாக செந்தில் பாலாஜியை துறைகள் இல்லாத அமைச்சராக நீடிக்க முதல்வர் ஸ்டாலின் செய்த பரிந்துரையை ஆளுநர் ஆர்என் ரவி ஏற்கவில்லை. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு கிரிமினல் நடவடிக்கையை எதிர்கொண்டு உள்ளார். இதனால் அவரை இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க ஒப்புதல் வழங்க முடியாது என ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்தார்.

இருப்பினும் கூட தமிழக அரசு விடவில்லை. நேற்று ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்காத நிலையில் இரவிலேயே தமிழக அரசு அரசாணையை பிறப்பித்தது. அதில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே தான் தற்போது ஆளுநர் ஆர்என் ரவியின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க ஆளுநர் ஆர்என் ரவியின் செயலுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமைச்சரவையில் இடம்பெறும் நபர்கள் என்பது முதல்வரின் விருப்பம் தான். ஆனால் சட்டத்தை மதிக்காமல் ஆளுநர் ஆர்என் ரவி அரசியல் செய்கிறார் என பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தமிழக அரசு தொடர வைப்பதில் ஆளுநர் ஆர்என் ரவி தலையீட முடியுமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. அதற்கான விடையை கீழே உள்ள தகவல்கள் உங்களுக்கு வழங்கும். அதாவது இந்தியாவை பொறுத்தமட்டில் ஒரு மாநில அமைச்சரவை குறித்து இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 164 விவரிக்கிறது. எம்எல்ஏக்களால் முதல்வர் தேர்வு செய்யப்படும் நிலையில் அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்வார். அதன்பிறகு முதல்வர் பரிந்துரையின்பேரில் அமைச்சர்களை ஆளுநர் நியமனம் செய்வார். இந்த சட்டப்பிரிவில் Pleasure of Governor என்ற வார்த்தை உள்ளது. இது முதல்வரின் விருப்பம், அல்லது அதிகாரம் என்பதை தான் குறிக்கும் என பல வழக்குகளில் விளக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பார்த்தால் ஒருவரை அமைச்சராக தேர்வு செய்வதில் முதல்வருக்கு தான் அதிக அதிகாரம் இருப்பது தெளிவாக தெரியும்.

அடுத்ததாக இன்னொரு விஷயத்தை பார்த்தால் இன்னும் தெளிவாக நாம் புரிந்து கொள்ள முடியும். அதாவது டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். இவர் பணமோசடி வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கைது நடவடிக்கையை தொடர்ந்து சத்யேந்திர ஜெயினின் இலாகா துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும் சத்யேந்திர ஜெயின் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார்.
இந்நிலையில் தான் சத்யேந்திர ஜெயின் அமைச்சராக தொடர எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2022 ஜூலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. ஜூலை இறுதியில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது குற்ற பின்னணி கொண்ட ஒருவர் அமைச்சரவையில் தொடர வேண்டுமா? இல்லையா? என்பதை முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து சிறையில் இருந்தாலும் கூட சத்யேந்திர ஜெயின் தொடர்ந்து 9 மாதங்கள் வரை இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார்.
அதன்பிறகு டெல்லி புதிய மதுபான ஊழல் வழக்கில் துணை முதல்வரான மணிஷ் சிசோடியா சிபிஐயால் கைது செய்ய்பட்டார். இவரும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வேளையில் தான் சத்யேந்திர ஜெயினும், மணிஷ் சிசோடியாவும் தாமாக முன்வந்து தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர். சத்யேந்திர ஜெயின் அமைச்சர் பதவியையும், மணிஷ் சிசோடியா துணை முதல்வர், அவர் வசம் இருந்த அமைச்சர் பொறுப்புகளையும் ராஜினாமா செய்தார். இதனால் தான் தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்என் ரவிக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, செந்தில் பாலாஜி விவகாரத்தில் இல்லாத அதிகாரத்தை பயன்படுத்த ஆளுநர் ஆர்என் ரவி முயன்று வருவதாக காட்டமாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி -
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி.. கேம் சேஞ்சர் ஸ்டாலின்.. திமுக பக்கா ஸ்கெட்ச் -
செந்தில் பாலாஜி கோவையில் போட்டியா.. ஆடிப்போன எஸ்.பி வேலுமணி.. செய்தியாளர் கேள்விக்கு மழுப்பல் பதில் -
கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. தங்கமணிக்கு எதிராக தாறுமாறாக வியூகம் அமைக்கும் செந்தில்பாலாஜி -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications