புதிய தேசிய கல்விக் கொள்கை வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்கும்! அமித் ஷா நம்பிக்கை!
சென்னை: தேசிய கல்விக் கொள்கை தான் ஒரு மாணவனை சிறந்த மனிதனாக மாற்றும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கல்வித்துறையில் தொடர்புடைய அனைவரும் புதிய தேசிய கல்விக் கொள்கை பற்றி முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

சிறந்த ஆளுமைகள்
ஒரு நாடு சிறந்த நிலையை அடைய சிறந்த ஆளுமைகள் தேவை என்றும் வெறுமனே மலைகள் மற்றும் ஆறுகளால் எந்த ஒரு நாடும் சிறந்த நாடாக அமையாது எனவும் தெரிவித்தார். தேசிய கல்விக்கொள்கை இந்தியாவின் ஆன்மாவை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார் அமித் ஷா.

புதிய கல்விக் கொள்கை
ஆங்கிலத்தில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் இந்தியர்களிடையே ஆங்கிலேயர்கள் தாழ்வு மனப்பான்மையை வளர்த்து தங்கள் காலனித்துவ ஆட்சியை நீட்டிக்கு முயற்சித்ததாக அமித்ஷா கூறியிருக்கிறார். புதிய கல்விக் கொள்கையை பொறுத்தவரை இந்திய கலைகள், கலாச்சாரம், தாய்மொழி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.

வெளிநாட்டு மாணவர்கள்
தேசிய கல்விக் கொள்கையை பொறுத்தவரை இந்திய மாணவர்களை மட்டுமல்லாமல் வெளிநாட்டு மாணவர்களை நிச்சயம் ஈர்க்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.மேலும் தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக பேசிய அவர், முந்தைய கல்விக் கொள்கை ஒரு மாணவனை குறிப்பிட்ட துறையில் நிபுணராக மட்டுமே மாற்றியது என்றும் தேசியக் கல்விக் கொள்கை மட்டுமே மாணவனை சிறந்த மனிதனாக மாற்றிக்காட்டும் என உறுதியளித்தார்.

தமிழக அரசு
புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஆளுநர் ரவி புதிய கல்விக் கொள்கை பற்றியும் அதன் பெருமைகள் பற்றியும் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications