தூக்கி குப்பையில் போடுங்க.. அண்ணாமலைக்கு "ஃபுல் பவர்" தந்த அமித் ஷா.. எடப்பாடிக்கு விழுந்த பெரிய இடி
சென்னை: அண்ணாமலை மோடிக்கு மதிப்பு கூட்டுகிறார். மோடி அண்ணாமலையை நம்புகிறார். எடப்பாடிக்கு பலம் இல்லை என்று அண்ணாமலை மோடியிடம் விளக்கி உள்ளார், என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை மீண்டும் பாத யாத்திரையை தொடங்கி உள்ளார். பாஜக - அதிமுக கூட்டணி முறிவிற்கு பின் யாத்தரையில் பிரேக் எடுத்த அண்ணாமலை அதை மீண்டும் தொடங்கி உள்ளார். அதிமுக கூட்டணி முறிவிற்கு பின் பாத யாத்திரை மீண்டும் தொடங்கி நடந்து சென்று கொண்டு இருக்கிறார். அவரின் இந்த பயணம் குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
ரவீந்திரன் துரைசாமி பேட்டி: அதில், அண்ணாமலையை மாற்றுவார்கள் என்ற வார்த்தைகளை குப்பையில் போடுங்க. அண்ணாமலை மோடிக்கு மதிப்பு கூட்டுகிறார். மோடி அண்ணாமலையை நம்புகிறார். எடப்பாடிக்கு பலம் இல்லை என்று அண்ணாமலை மோடியிடம் விளக்கி உள்ளார். அமித் ஷாவிடம் விளக்கி உள்ளார். அதனால் டெல்லி இதில் அண்ணாமலை நடவடிக்கையை ஏற்றுக்கொண்டது.

கொங்கு மண்டலத்திலேயே எடப்பாடியை மக்கள் விரும்பவில்லை. சசிகலா, பன்னீர்செல்வத்தை எடப்பாடி நீக்கியதை கொங்கு மக்கள் விரும்பவில்லை. அதனால் எடப்பாடி க்கு சீட்டு வராது என்று அண்ணாமலை டெல்லியிடம் சொல்லி இருக்கிறார். அதை அமித் ஷா ஏற்றுக்கொண்டு.. அதிமுகவிற்குத்தான் ஆதரவு இல்லையே எங்களுக்கு 20 சீட்டு கொடுங்கள் என்று கேட்டுள்ளனர்.
எடப்பாடி ஏற்கவில்லை: ஆனால் அதை எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை. 20 இடங்கள் கொடுக்க முன்வரவில்லை. மோடி இல்லாமல் நீங்கள் லோக்சபா தேர்தலை சந்திக்க முடியாது என்று அமித் ஷா எடப்பாடியிடம் கூறியுள்ளார். ஆனால் அதை எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கூட்டணி முறிந்துவிட்டது.
( 1 மாசம் ஆக போகுது.. ஸ்டாலின் போட்ட போடு.. கடும் டென்ஷனில் எடப்பாடி.. நடுங்கி போன அதிமுக.. ஏன்?)
இதனால் இங்கே அண்ணாமலையை முன்னிறுத்த பாஜக முடிவு செய்துள்ளது. அண்ணாமலையை பவர் புல் தலைவராக முன்னிறுத்த முடிவு செய்துள்ளனர். மோடிக்கு ஆதரவை கொண்டு வர அண்ணாமலைக்கு ஆதரவு கொடுக்கின்றனர். அண்ணாமலைக்கு முழு சப்போர்ட் கொடுங்கள் என்று டெல்லி கூறி உள்ளது. அதனால்தான் பிரதமர் கூட இங்கே வர உள்ளார்.
அடுத்து என்ன நடக்கும்?: அண்ணாமலை யாத்திரைக்கு மோடி வருவார். அப்போது ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் அதில் கலந்து கொள்வார்கள். இதில் என்டிஏ கூட்டணி எப்படி இருக்கும் என்ற தோற்றம் காட்டப்படும். என்டிஏ கூட்டணியின் புதிய முகம் இதில் பலருக்கும் தெரியும். ஈரோடு கிழக்கு தேர்தலில் கூட எடப்பாடி வெல்ல முடியவில்லை. 2019ல் கொங்கில் கூட அவரால் எம்பி சீட்டுகளை வெல்ல முடியவில்லை.

அப்படி இருக்க அவர் என்ன செய்ய போகிறார் என்றுதான் அண்ணாமலைக்கு முக்கியத்துவம் கொடுக்க பாஜக முடிவு செய்துள்ளது. அதிமுகவில் தமிழ்நாட்டில் உள்ள சீனியர் லீடர்கள் அதிமுக கூட்டணியை விரும்புகிறாரக்ள். எல் முருகன் தொடங்கி எச் ராஜா.. வானதி சீனிவாசன் வரை யாருமே அதிமுக கூட்டணி வேண்டாம் என்று சொல்லவில்லை. அவர்கள் கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர்.
ஆனால் டெல்லி அண்ணாமலையை நம்புகிறது. கூட்டணி வேண்டாம் என்ற நிலையில் அண்ணாமலை இருக்கிறார். வெறும் 5 சீட்டு வாங்கிக்கொண்டு செல்ல முடியாது என்பதில் அண்ணாமலை உறுதியாக இருக்கிறார். பாஜக இப்போது பலத்தோடு இருக்கிறது. அண்ணாமலைதான் இங்கே முடிவுகளை எடுத்துக்கொண்டு இருக்கிறார். அவர்தான் இங்கே முடிவுகளை எடுப்பார். முடிந்தால் பாருங்கள், என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
-
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications