தமிழ்நாட்டிற்கு வந்து இறங்குவதற்கு முன்பாகவே தமிழில் ட்வீட் செய்து திமுக அரசை சீண்டிய அமித் ஷா
சென்னை: தமிழக மக்கள் திமுக அரசின் அதிகப்படியான ஊழல் மற்றும் பொய் வாக்குறுதிகளால் சலிப்படைந்துள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். இன்று தமிழகம் வரும் நிலையில் தமிழில் பதிவிட்டுள்ளார் அமித் ஷா.
தமிழகத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று அமித்ஷா திருச்சி வருகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அந்தமானிலிருந்து தனி விமானத்தில் திருச்சி விமான நிலையம் வருகிறார். அவர் புதுக்கோட்டையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசாரப் பயண நிறைவு விழாவில் பங்கேற்கிறார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

பின்னர் சாலை வழியாக திருச்சிக்கு வரும் அவர், ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் தேர்தல் பரப்புரை, தேர்தல் வியூகம், தமிழக அரசியலின் தற்போதைய நிலை, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர், நாளை காலை ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து, மன்னார்புரத்தில் நடைபெறும் 'மோடி பொங்கல் விழா'- வில் பங்கேற்கிறார். இதையடுத்து பகல் 1:20 மணிக்கு கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று, அங்கிருந்து புதுடெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமித்ஷாவின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தப் பயணம் குறித்து சமூக வலைதளத்தில் தமிழில் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக மக்கள் திமுக அரசின் அதிகப்படியான ஊழல் மற்றும் பொய் வாக்குறுதிகளால் சலிப்படைந்துள்ளனர். 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' பேரணி மாநிலம் முழுவதும் தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
பல லட்சக்கணக்கான மக்களை இந்தப் பேரணி இணைக்கிறது. இன்று அதன் நிறைவு விழாவையொட்டி, தமிழகத்தின் புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகளுடன் உரையாற்றுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications