அமித் ஷா முதல் நயினார் வரை.. எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் பாஜக! கூட்டணி அமைக்க காரணமே அதுதான்
சென்னை: எடப்பாடி பழனிசாமியை பலவீனமான தலைவராக மக்கள் மத்தியில் பதிவு செய்வதற்காகவே அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து கூறி இருக்கிறனர். அதிமுகவைச் சேர்ந்தவரே முதலமைச்சர் என்று கூறிய அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியின் பெயரை சொல்லாமல் தவிர்த்ததற்கு இதுவே காரணம் என்றும் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர். இதன்பின் கூட்டனி ஆட்சி என்ற வார்த்தை மூலமாக பாஜக நிர்வாகிகள் அழுத்தம் கொடுக்க, அதிமுக 2ஆம் கட்ட தலைவர்கள் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி அல்ல என்று விளக்கம் கொடுத்தனர்.

அமித்ஷா பேச்சு
இந்த நிலையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அதிமுகவுக்கு கீழ் பாஜக இருப்பதால், அதிமுகவைச் சேர்ந்தவரே முதலமைச்சராக இருப்பார் என்று கூறி இருந்தார். கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்திய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை அமித்ஷா தவிர்த்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிமுகவின் பதில்
இதற்கும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான வைகைச் செல்வன் மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் வேகவேகமாக விளக்கம் கொடுத்துள்ளனர். அதேபோல் முருகன் மாநாடு விவகாரத்திலும் பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை. இந்து முன்னணி தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை. அப்போதும் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டு, விளக்கம் கொடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது.
பாஜகவின் தெளிவு
இப்படி பாஜகவுடன் கூட்டணி அமைத்த பின், அதிமுக தொடர்ச்சியாக பின்னால் நின்று கொண்டு விளக்கம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு வருகிறது. இதன் மூலமாக தமிழ்நாட்டில் கூட்டணி முடிவு செய்யும் இடம் மட்டுமல்லாமல், யார் முதலமைச்சர் முடிவு என்று முடிவு எடுக்கும் அதிகாரமும் தங்களுக்கே இருப்பதாக பாஜக தெளிவாக காய் நகர்த்தி வருகிறது.
முதல்வர் வேட்பாளர்
அதேபோல் அமித்ஷா பேட்டிக்கு பின், முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று சொல்வதற்கு நயினார் நாகேந்திரனும் தயக்கம் காட்டி வருகிறார். அதிமுக வரலாற்றில் ஜெயலலிதா இருந்தது வரை, அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று யாரும் சொன்னதே கிடையாது. ஆனால் அதிமுக தலைவர்கள் மீண்டும் மீண்டும் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லி வருகின்றனர்.
பாஜகவின் திட்டம்
இதன் மூலமாக அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்ததற்கு காரணமே, எடப்பாடி பழனிசாமியை பலவீனமான தலைவராக காட்டுவதற்காக தான் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாகவே அமித்ஷா தொடங்கி நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை என்று அனைவரும் கூட்டணி ஆட்சி என்று ஒரே குரலில் பேசி வருவதாக பார்க்கப்படுகிறது.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது












Click it and Unblock the Notifications